Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: சிராஜ், பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு.. 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 247 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 224 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்ததார். இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வி உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Ind vs Eng

ஆனால் இந்திய வீரர்கள் அதன் பிறகு ஆக்ரோசமாக பந்து வீசி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தனர். சிராஜ், பிரசித் ஆகியோர் அனல் பறக்க பந்து வீசினர். அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் அவர்களை ஸ்லேஜிங்கும் செய்தனர்.

இந்தியாவின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க அந்த அணி 247 ரன்கள் மட்டும் தான் முதல் இன்னிங்சில் எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 53 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் பிரசிக் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

கிறிஸ் வொக்ஸ் பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் இங்கிலாந்து அணி இந்தியாவை விட வெறும் 23 ரன்கள் தான் முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இங்கிலாந்து அணி 23 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அது இங்கிலாந்துக்கு சாதகமாக மாறாமல் இருக்க வேண்டுமென்றால், இந்திய அணி வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயிக்க வேண்டும்.

Story first published: Friday, August 1, 2025, 22:59 [IST]
Other articles published on Aug 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+