Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு.. அபாயகரமான பவுலருக்கு அணியில் இடமில்லை

பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறது.

இந்த சூழலில் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தங்களது பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியின் போலவே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க 48 மணி நேரம் இருப்பதற்கு முன்பு இங்கிலாந்து அணி தங்களுடைய பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது.

Ind vs Eng

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாத நிலையில் பிளேயிங் லெவனில் உடனடியாக சேர்க்கக்கூடாது என பல முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள பிளேயிங் லெவலில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் முதல் டெஸ்டில் விளையாடிய அதே அணிக்கு தான் இரண்டாவது டெஸ்டிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வொக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜான் டங்க் ஆகியோர் இந்திய அணி வீரர்களை அடிக்கவிட்டாலும், முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்க செய்தனர். இதனால் இந்த பௌலிங் படை மீது நம்பிக்கை வைத்துள்ள மெக்குல்லம் மற்றும் பயிற்சியாளர் தேர்வு குழுவினர் இதே அணி இரண்டாவது டெஸ்டிலும் விளையாட வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

இந்த பவுலிங் படை முதல் இன்னிங்ஸில் கடைசி 41 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஆர்ச்சர் தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அந்தப் போட்டியில் 18 ஓவர்கள் வீசிய அவர் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இதனால் அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் குடும்ப சூழல் காரணமாக தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்கவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்று இங்கிலாந்து அணியில் இருந்த ஷாம் கூக், ஜெமி ஓவர்டன் மற்றும் ஜேக்கப் பொத்தேல் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பிளேயிங் XI: 1, ஜாக் கிராலி, 2, பென் டக்கட், 3, ஜோ ரூட், 4, ஆலி போப், 5, ஹாரி புரூக், 6, பென் ஸ்டோக்ஸ், 7, ஜெமி ஸ்மித், 8, கிறிஸ் வொக்ஸ், 9, ஜாஸ் டாங், 10, பிரைடன் கர்ஸ், 11, சோயிப் பஷிர்

Story first published: Monday, June 30, 2025, 20:14 [IST]
Other articles published on Jun 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+