பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஏமாற்று வேலையை செய்து வந்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. அதனை இந்தியா கண்டுபிடித்து அதற்கு சரியான ஆப்பை வைத்திருக்கின்றது. பொதுவாக ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மண்ணில் விளையாடும் போது தங்களுக்கு ஏற்றவாறு ஆடுகளம் அமைப்பார்கள்.

உதாரணத்திற்கு இந்திய அணி சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கிறது என்று பலரால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதேபோன்று வெளிநாடுகளில் வேகப்பந்து வச்சு சாதகமாக அந்தந்த அணிகள் ஆடுகளம் தயாரிக்கும். ஆனால் இங்கிலாந்து அணி ஒரு படி மேல் பொய் பேஸ் பால் என்ற ஒரு புதிய யுத்தியை கடைப்பிடிக்கின்றது.
அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி ரன்கனை சேர்க்கும் முறை தான் பேஸ் பால் ஆகும். இந்த பேஸ் பால் வந்த பிறகு மற்ற அணிகள் 100 ஓவர்கள் சந்தித்து 300 ரன்கள் மேல் அடிக்கும் ஸ்கோரை இங்கிலாந்து அணி 60 ஓவரில் அடித்து விடும். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு பெரிய சாதகம் உருவாகி போட்டியில் வெற்றி பெறும் நிலை ஏற்படுகிறது.
இப்படித்தான் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 371 என்ற இலக்கை கடைசி நாளில் இங்கிலாந்து அணி அபாரமாக எட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ரன் குவிப்புக்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரித்து விட்டு எதிரணி நிர்ணயிக்கும் ஸ்கோரை விரைவாக எட்டி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று விடலாம் என்ற ஒரு புதிய முறையை கடைப்பிடித்து வருவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆடுதளத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டை போல் விளையாடிவிட்டு நாங்கள் புதிய நடைமுறையை டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டு வருகிறோம் என்று இங்கிலாந்து அணி ஏமாற்றி வருகிறது. இங்கிலாந்து பிட்ச் என்றால் பந்து நன்றாக ஸ்விங்க ஆகும் என்ற நடைமுறை மாறி தற்போது ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளமே வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதேபோல் விளையாடி ரன்களை சேர்த்து வெற்றி பெறுகின்றனர். இதேபோன்று பந்து பழையதாக மாறினால், அது எளிதாக அடிக்கும் டியூக் வகை பந்துகளையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பயன்படுத்துகிறது.
ஒருவேளை ஆடுகளம் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமாக ஸ்விங் ஆனால் அந்த ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி வேகமாக விளையாடி 300 ரன்களை அடித்தாலும் விக்கெட்டுகளை அனைத்தையும் இழந்து விடுகிறது. இந்த நடைமுறை அவர்களுக்கு கை கொடுப்பதால் தான் இதே போன்ற ஆடுகளத்தை தயாரிக்கின்றனர்.
இதனை கண்டுபிடித்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு நேரத்தையும் கொடுக்கக் கூடாது, இலக்கையும் அதிகமாக வைக்க வேண்டும் என இரண்டாவது டெஸ்டில் நான்காவது நாள் இறுதியில் தான் இங்கிலாந்துக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பை கொடுத்தது. ஆனால் 608 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் அதனை இங்கிலாந்து அணி வீரர்களால் எட்ட முடியவில்லை.
மேலும் இங்கிலாந்து அணி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தையும் ஆட தெரியாததால் அவர்கள் தங்களுடைய 10 விக்கெட்டுகளையும் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்தியா இந்த நடைமுறையை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், இந்திய வீரர்களும் பேட்டிகளில் சிறப்பாக விளையாடவதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்து இருக்கின்றது.