Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: கம்பீர், சூர்யகுமார் கூட்டணிக்கு முதல் தோல்வி.. வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி

ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ராஜ்கோட் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலில் இருந்தே தடுமாறினர்.

india vs england suryakumar yadav hardik pandya varun chakravarthy

அந்த அணியின் தொடக்கவீரர் மட்டும் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இதேபோன்று நடுவரிசையில் லிவிங்ஸ்டோன் 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும்.மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க தவறினர். இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆதில் ரசித், மார்க் வுட் 24 ரன்கள் சேர்த்தனர்.

இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தேவையில்லாத ஷாட் ஆடி 3 ரன்களில் ஆட்டமிருந்தார். இதேபோன்று அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகள் எடுத்து 14 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.

எனினும் அவரும் பொறுப்பற்ற முறையில் ஒரு ஷாட் ஆடி 24 ரன்களில் பெவிலிய திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூரியகுமார் 14 ரன்களிலும், சென்னை டி20 போட்டியில் இந்திய அணியை காப்பாற்றிய திலக் வர்மா 18 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களில் வெளியேற இந்திய அணி 85 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆறாவது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் ஆடுகளம் தோய்வாக மாறியதால், இந்திய அணி வீரர்களால் பெரிய சாட் அடிக்க முடியவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா 35 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

அக்சர் பட்டேல் 15 ரன்கள் எடுக்க மற்ற வீரர்களால் ரன்கள் எடுக்க முடியவில்லை. இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி கடைசி ஜோடிக்கு 24 ரன்கள் சேர்த்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் மூலம் கேப்டன் சூரியகுமார் யாதவும், பயிற்சியாளர் கம்பீரும் இணைந்து முதல் முறையாக டி20 போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, January 28, 2025, 22:46 [IST]
Other articles published on Jan 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+