Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 5வது டெஸ்டில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகல்.. பிளேயிங் லெவனில் 4 மாற்றம்

லண்டன்: இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகி இருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி ஏற்கனவே இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது.

மேலும் ஐந்தாவது டெஸ்ட் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் சமனில் முடிவடைந்து விடும். ஆனால் இங்கிலாந்து அணி ஐந்தாவது போட்டியை டிரா செய்தாலே, தொடரை வென்று விடும். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங், பந்துவீச்சு என கடுமையாக உழைத்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.

Ben stokes

இதனால் ஸ்டோக்ஸ் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆலி போப் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியில் இருந்து நான்கு பேர் ஐந்தாவது டெஸ்டில் விலகி இருக்கின்றார்கள்.

குறிப்பாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பிரைடன் கர்ஸ், ஐந்தாவது டெஸ்டில் இருந்து விலகி இருக்கின்றார். பனிச் சுமையை நிர்வகிக்க இந்த முடிவை எடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கின்றது.

மேலும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய லியாம் டாசன் நான்காவது டெஸ்ட் ஒரே இன்னிங்சில் 48 ஓவர்கள் வரை வீசியிருந்தார். இதனால் அவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இங்கிலாந்து அணியில் ஜேக்கப் போர்த்தேக் கஸ் ஆட்கின்சன் ஜெமி ஓவர்டன் மற்றும் ஜோஸ் டேங்க் ஆகியோர் ஐந்தாவது டெஸ்ட் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சார்களாக பேத்தல் மற்றும் ஆர்ச்சர் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு அனுபவம் தேவை என்பதால் கிறிஸ் வொக்ஸ் ஐந்தாவது டெஸ்டில் விளையாடுகின்றார். இங்கிலாந்து அணிக்கு தற்போது திரும்பி உள்ள கேஸ் ஆட்கின்சன் காயம் காரணமாக கடந்த இரண்டு மாதமாக விளையாடாமல் இருந்தார். தற்போது கவுண்டி கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் உடல் தகுதியை நிரூபித்த நிலையில் அவருக்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்திருக்கின்றது.

Story first published: Wednesday, July 30, 2025, 16:20 [IST]
Other articles published on Jul 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+