Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஜெய்ஸ்வால் விக்கெட்டை எடுக்க அவமானப்பட்ட ஸ்டோக்ஸ்.. முகத்தை மூடி கொண்டு சென்ற கேப்டன்

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் தொடங்கிய ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். ஆடுகளம் ஆட்டத்தின் முதல் நாளில் முதல் செஷனில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணி இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆனால் இந்திய அணி வீரர்கள் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தனர். ஒரு கட்டத்தில் பதற்றம் அடைந்த இங்கிலாந்து அணியினர் எப்படியாவது ஜெய்ஸ்வால் அல்லது ராகுல் விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தனர்.

Yashasvi Jaiswal

இதன் காரணமாக ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா என்ற நோக்கில் டிஆர்எஸ் முடிவை தவறாக பயன்படுத்தினர். ஆட்டத்தின் 12.2 வது ஓவரில் டாங்க் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் அடிக்க முற்பட்டபோது அது அவரின் காலில் பட்டது. இதற்கு நடுவர் அவுட்டு தரவில்லை என்றவுடன் டிஆர்எஸ் முடிவை இங்கிலாந்து அணி வீரர்கள் எப்படியாவது விக்கெட் கிடைத்து விடுவதா என்று ஆசையில் கேட்டனர்.

ஆனால் அந்த பந்து ஸ்டெம்புக்கு வெளியே சென்றது ரிப்ளேவில் தெரிய வந்தது. இது ஒரு மோசமான ரிவ்யூ ஆக பார்க்கப்பட்டது. பந்து கொஞ்சம் கூட அருகே வரவில்லையே என்று ரிப்ளேவை பார்த்த ஸ்டோக்ஸ் உடனே தனது முகத்தை மூடிக்கொண்டு சென்றார். விக்கெட் கீப்பரான ஜெமி ஸ்மித் ஸ்டோக்சை தவறாக வழி நடத்தியதன் காரணமாக தான் அவர் ரிவ்யூ வீணடித்ததாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்டோக்ஸ் ரிவ்யூ எடுப்பதில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டார்.
தொடர்ந்து ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். ராகுல் 42 ரன்களில் ஆட்டம் இழக்க ஜெயஸ்வால் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 144 பந்தில் சதம் விளாசினார். இதில் 16 பவுண்டரி, ஒரு சதம் அடங்கும்.

Story first published: Friday, June 20, 2025, 20:06 [IST]
Other articles published on Jun 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+