Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்ரேயாஸ் அணியை அசிங்கப்படுத்திய இங்கிலாந்து கேப்டன்.. இதைவிட சிறந்த வெற்றி உலகத்திலேயே இல்லை

பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழிநடத்தும் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. கடந்த போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, இந்தப் போட்டியில் வெறும் 14-வது ஓவரிலேயே தோல்வியைத் தழுவியது. மேலும், தொடரை 3-0 என இங்கிலாந்திடம் கோட்டைவிட்டுள்ளது.

பிரிஸ்டலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஆளாகப் போராடி 49 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார். அவர் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்தார். சிவம் துபே நிதான ஆட்டம் ஆடி 22 ரன்கள் எடுத்தார். இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

IND vs ENG England Captain Harry Brook gifts India a 9-Wicket Defeat to Lose T20I Series

ஆனால், 159 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் மிகச் சாதாரணமாக ஊதித் தள்ளினார். இந்திய பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 13.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹாரி புரூக் அதிரடியால் 37 பந்துகள் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து அணி வென்றது.

ஹாரி புரூக் வெறும் 35 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரர் பிலிப் சால்ட் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். முந்தைய மூன்றாவது போட்டியில் வெறும் 76 ரன்களுக்குச் சுருண்டு 125 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுத் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இந்தப் போட்டியில் 14-வது ஓவருக்குள்ளாகவே தோல்வியடைந்து இருக்கிறது.

இந்திய அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். அர்ஷ்தீப் சிங் மட்டுமே 1 விக்கெட் வீழ்த்தினார். கௌதம் கம்பீரின் பயிற்சி முறைகளும், ஸ்ரேயாஸ் ஐயரின் பலவீனமான கேப்டன்சியும் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் அதிரடி ஆட்டத்தால் தவிடுபொடியாக்கப்பட்டன.

“எனக்கு இப்படியா நடக்கணும்?” நொந்து போன வைபவ் சூர்யவன்ஷி.. மூன்று போட்டியிலும் சொதப்பல்

“எனக்கு இப்படியா நடக்கணும்?” நொந்து போன வைபவ் சூர்யவன்ஷி.. மூன்று போட்டியிலும் சொதப்பல்

2026 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அடுத்து அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 6 போட்டிகளில் ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் தவித்து வருகிறது. இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், கம்பீர் மற்றும் ஸ்ரேயாஸின் தவறான திட்டமிடல்கள் மீதான ரசிகர்களின் அதிருப்தி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Story first published: Friday, July 10, 2026, 1:40 [IST]
Other articles published on Jul 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+