Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 4 இம்பேக்ட் வீரர்களை வைத்திருக்கிறோம்.. டாசில் இந்தியாவை பங்கமாக கலாய்த்த ஜாஸ் பட்லர்

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றியது. இந்த நிலையில் இந்த ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாக தான் நடைபெறும்.

ரன் குவிப்புக்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் நாங்கள் இந்த தொடரில் அவ்வப்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடி இருக்கின்றோம்.

ind vs eng suryakumar jos buttler mohammed shami

எனினும் எங்களுடைய திட்டத்தை இன்னும் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திருக்க வேண்டும். ஆட்டத்தில் சில தருணங்களை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடரை இழந்தாலும், நல்ல ஒரு சூழல் அணிக்குள் இருக்கின்றது. மும்பை ஒரு நல்ல மைதானம். ரசிகர்களும் அதிக அளவு கூடுவார்கள்.

மார்க் வுட் அணியில் இருக்கின்றார். எங்கள் அணியில் இன்று நான்கு இம்பேக்ட் வீரர்கள் இருக்கிறார்கள். இதை தொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் சூரியகுமார், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் முடிவு எடுத்தோம். இன்று இரவு அதிகம் பனிப்பொழிவு இருக்காது என நம்புகிறேன். எங்கள் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும்.

அதை தான் நான் எங்கள் அணி வீரர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். அதை தான் நாங்கள் வெற்றிகரமாகவும் செய்து வருகிறோம். நாம் சில ஆட்டங்களை ரிஸ்க் எடுத்து விளையாடுகிறோம். இதனால் சில சமயம் ஆட்டம் இழக்க நேரிடுகிறது. டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே ரிஸ்க் எடுத்தால் தான் அதற்கு உரிய பலன் கிடைக்கும். இன்றைய ஆட்டத்தில் ஆர்ஸ்தீப் சிங் பதில் முகமது ஷமி திரும்பி இருக்கின்றார் என்று சூரியகுமார் தெரிவித்துள்ளார்.நான்காவது டி20 போட்டியில் அபாரமாக விளையாடிய ஹர்ஷித் ராணா இன்றைய போட்டியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 2, 2025, 19:03 [IST]
Other articles published on Feb 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+