IND vs ENG: ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்.. இங்கிலாந்துக்கு ஆரம்பமே சோகம்.. சதம் அடித்த வீரர் டக் அவுட்
பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் படை தற்போது பேட்டிங்கில் 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கி உள்ளது.
இந்த சூழலில் இந்திய அணியில் கேப்டன் கில் 269 ரன்கள் குவிக்க முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது. இந்திய வீரர்களே இந்த ஆடுகளத்தில் 587 ரன்கள் அடித்தால் இங்கிலாந்து அணி எவ்வளவு அடிக்கும் என்று சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணியின் பந்துவீச்சு இருந்தது. கடந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறை திருத்திக்கொண்ட இந்திய அணியின் பவுலர்கள் இன்று ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீரர்களுக்கு இலவச பந்துகளை எதுவும் தராமல், அட்டாக்கிங் லைனில் பந்துவீச்சை வீசினர். இதில் தடுமாறிய இங்கிலாந்து வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.
குறிப்பாக ஆகாஷ் தீப் வீசிய ஒரே ஓவரில் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. கடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த பென் டக்கட், இம்முறை டக் அவுட் ஆகி வெளியேறினர். இதேபோன்று முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஆலி போப், இன்றைய ஆட்டத்தில் முதல் பந்திலே கோல்டன் டக் ஆனார். இதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான ஜாக் கிராலி மூன்று பவுண்டரிகளை அடித்து 19 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் கருண் நாயர் ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 562 ரன்கள் குறைவாகும். ஆடுகளும் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் எப்படி விரைவாக மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள் என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இருக்கின்றனர். எனினும் மற்ற வீரர்களை அடிக்க விடாமல் இங்கிலாந்தை சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க வைக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications