Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான பிளேயிங் 11 இதுதான்.. ஒருநாள் முன்பே அறிவித்த இங்கிலாந்து.. ஆர்ச்சர் வருகை

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் ஜூலை 4 அன்று நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி தனது பிளேயிங் லெவனை ஒருநாள் முன்பே, ஜூலை 3 அன்றே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் டங் தனது சர்வதேச அறிமுகப் போட்டியில் விளையாட உள்ளார்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி புரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோஷ் டங்.

IND vs ENG England Playing XI for 2nd T20I Jofra Archer Returns Against India Josh Tongue Set for Debut

முதல் டி20 போட்டியில் விளையாடிய சாகிப் மஹ்மூத் மற்றும் லூக் வுட் ஆகியோருக்குப் பதிலாக ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மழையால் கைவிடப்பட்ட முதல் போட்டியில் சாகிப் மஹ்மூத் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து, சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா ஆகியோரின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நன்றாக பந்துவீசிய பந்துவீச்சாளரை எதற்காக நீக்கி இருக்கிறது இங்கிலாந்து அணி? என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொரு பந்துவீச்சாளரான லூக் வுட் விக்கெட் ஏதுமின்றி 3 ஓவர்களில் 35 ரன்களை வாரி வழங்கினார். அப்போட்டியில் இந்தியா 20 ஓவர்களில் 189/7 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், 15 வயதான அதிரடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ்.. சிட்னியில் அறிவிக்கப் போகும் பிரதமர் மோடி.. பின்னணி என்ன?

சென்னையில் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ்.. சிட்னியில் அறிவிக்கப் போகும் பிரதமர் மோடி.. பின்னணி என்ன?

இதுகுறித்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் கூறுகையில், "15 வயதில் இந்திய அணிக்காக விளையாடுவது ஒரு அற்புதமான கதையாகும். எதிரணியாக இருந்தாலும் அவரது திறமையைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. அவருக்கு எதிராகப் பந்துவீச எங்களிடம் சில திட்டங்கள் இருந்தாலும், இறுதியில் அது பேட்டிங்கிற்கும் பந்துவீச்சிற்கும் இடையிலான ஒரு போட்டியாகவே இருக்கும்" என்று கூறினார்.

Story first published: Friday, July 3, 2026, 21:24 [IST]
Other articles published on Jul 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+