எங்களை அவ்ளோ ஈஸியா ஜெயிக்க முடியாது.. இந்திய அணிக்கு சவால்.. பாய்ந்து வரும் அந்த அணி!
சென்னை : இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் எதிர்கொள்ள உள்ளது.
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தாலும், இங்கிலாந்து அணியை அதே போல எளிதாக எண்ணி விட முடியாது.
இங்கிலாந்து அணி முழு அளவில் தயாராகி வருகிறது. அதனால், இந்திய மண்ணில் ஒரீரு போட்டிகளில் அந்த அணி, இந்திய அணியை வீழ்த்த வாய்ப்பு உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இந்திய அணி கடினமான ஆஸ்திரேலிய தொடரில் பாதி முக்கிய வீரர்களை இழந்து, இளம் வீரர்கள் அணியைக் கொண்டு பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதனால், இந்திய அணி மகிழ்ச்சியில் மிதந்து வருகிறது. அடுத்து இங்கிலாந்து அணியையும் இந்திய அணி இதே போல வீழ்த்தும் என ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

இலங்கை தொடர்
ஆனால், இங்கிலாந்து அணியை குறைத்து எடை போடக் கூடாது என்கிறார்கள் விமர்சகர்கள். அந்த அணி இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது.

நல்ல பயிற்சி
அதில் 2 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியை வீழ்த்துவது அத்தனை பெரிய விஷயமில்லை என்றாலும், சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் இலங்கை ஆடுகளத்தில் அந்த அணி நல்ல பயிற்சி பெற்றுள்ளது. இலங்கை தொடரின் மூலம் இந்திய துணைக்கண்ட சூழ்நிலையில் அந்த அணி வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

தயார்
எனவே, இலங்கை தொடரில் செய்த சிறிய தவறுகளையும் சரி செய்து கொண்டு இந்திய அணிக்கு எதிராக முழு அளவில் தயாராகி ஆடும் இங்கிலாந்து அணி. எனவே, இந்திய அணி டெஸ்ட் தொடரில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறார்கள் விமர்சகர்கள்.


Click it and Unblock the Notifications