Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இங்கிலாந்து செய்வது சூதாட்டத்திற்கு சமம்.. முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கருத்து

பர்மிங்காம்:

Ind vs Eng
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. எனினும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய அணியில் ஐந்து சதம் அடிக்கப்பட்டது. இதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் இங்கிலாந்து அணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சு பலத்தை அதிகரிக்கும். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.

ஏனென்றால் ஜோப்ரா ஆர்ச்சர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அடுத்த நான்கு ஆண்டுகள் அவர் எந்த ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லை. இதனால் ஜோப்ரா ஆர்ச்சர் பழைய மாதிரி திரும்பி செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் நாசர் உசேன், முதலில் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்கு திரும்பி இருக்கிறார் என்று கேள்விப்படுவதை நல்ல விஷயம்தான்.

ஏனென்றால் தனது உடல் தகுதியை மீட்க ஜோப்ரா ஆர்ச்சர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். காயத்திலிருந்து தற்போது மீண்டும் அவர் வந்திருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் அவர் நான்கு ஆண்டுகளாக விளையாடவில்லை. தற்போது அவர் திரும்பி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் ஒரு இங்கிலாந்து ரசிகராக இருந்தால் நிச்சயம் ஜோப்ரா ஆர்ச்சர் கையில் சிவப்பு பந்து இருப்பதை பார்க்க நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.

ஆனால் இந்த வாரமே அவரை அணியில் சேர்த்து இருப்பது கொஞ்சம் ரிஸ்க் எடுப்பது போல் எனக்கு தெரிகின்றது. உடல் தகுதி எந்த அளவுக்கு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. தற்போது ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்த்தார் .யாரை அணியை விட்டு நீக்குவார்கள், கிறிஸ் வொக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் , பிரைடன் கர்ஸ் ஜாஸ் டாங்க் போன்ற வீரர்கள் இருக்கும்போது, இதில் யாரை தேர்வு செய்வார்கள்.

இது இங்கிலாந்து அணி செய்யும் சூதாட்டம் போல் இருக்கின்றது. ஆனால் இந்த சூதாட்டம் பலனை தருமா தராதா என்று தெரியவில்லை. நான் ஆக இருந்தால் நிச்சயம் ஜோப்ரா ஆர்ச்சர்க்கு இன்னும் ஒரு வாரம் ஓய்வு வழங்கி அவரை லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு அழைத்திருப்பேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் திரும்புகிறார்.

இந்த வாரம் கவுண்ட் கிரிக்கெட்டில் சஸ்சக்ஸ் அணிக்கு 18 ஓவர்கள் மட்டுமே அவர் வீசி இருக்கின்றார். ஆர்ச்சர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் அவர்தான் உலகின் சிறந்த பவுலராக இருப்பார்.அவரிடம் நல்ல வேகம் இருக்கின்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு உடல் தகுதி நீண்ட காலமாக பிரச்சனையை கொடுக்கின்றது. எனவே இது நிச்சயம் ஒரு சூதாட்ட ரிஸ்க் தான்.

இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்த சூழலில் ஏன் தற்போது மீண்டும் ஏன் அவசரமாக சேர்க்கிறீர்கள். ஒருவேளை ஆசஸ் டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருப்பதால் ஜோப்ரா ஆர்ச்சரை சீக்கிரம் பயன்படுத்த அணி நிர்வாகம் யோசிப்பதாக நினைக்கின்றேன் என்று நாசர் உசேன் தெரிவித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூலை இரண்டாம் தேதி தொடங்குகிறது.

Story first published: Friday, June 27, 2025, 14:17 [IST]
Other articles published on Jun 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+