Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் தோல்விக்கு கம்பீர் செய்த முட்டாள்தனமே காரணம்.. பயிற்சி ஆட்டத்திற்கு பின் நடந்ததை கவனீங்க

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தும், இந்தியா தோல்வியை தழுவியது. இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் ஐந்து சதம் அடித்தும் இந்த போட்டியில் தாம் தோல்வியை தழுவி இருப்பது தான் வரலாற்று சோகமாக மாறி இருக்கிறது.

ஒரே நாளில் 350 ரன்கள் மேல் அடிக்கவிட்ட இந்திய அணியில் பௌலர்கள் மீதுதான் தற்போது கத்தி திரும்பி இருக்கிறது. பும்ரா முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஆனால் அவரை தவிர வேறு எந்த ஒரு வீரர்களும் பெரிய அளவில் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Ind vs Eng

குறிப்பாக பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாக்கூர் போன்ற வீரர்கள் எல்லாம் ஒரு ஓவருக்கு ஐந்து ரன்களுக்கு மேல் கொடுத்தனர். இதுதான் தோல்விக்கு காரணமாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் கம்பீர் செய்த முட்டாள் தனமே இந்த தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பயிற்சி ஆட்டத்திலேயே சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஒரு ஓவருக்கு நான்கு ஐந்து நன்களுக்கு மேல் வழங்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் ஆனால் சிஎஸ்கே வீரர்களான கலீல் அகமத் மற்றும் அன்சூல் காம்போஜ் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளையும் வீழ்த்தியதாக குறிப்பிட்டுள்ளனர். கலீல் அகமத் ஒரே இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்துகிறதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அன்சூல் காம்போஜ் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த நிலையில் இங்கிலாந்து எதிரான இந்திய தொடரிலும் அபாரமாக பந்து வீசி இருக்கிறார் என்று பாராட்டியுள்ளனர். ஆனால் இந்த இரண்டு வீரர்களையும் கம்பீர் தேவை இல்லாமல் அணியை விட்டு அனுப்பி விட்டதாகவும், இதுதான் தோல்விக்கு காரணம் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று எழுதப்படாத விதி. இந்த சூழலில் ஆர்ஸ்தீப் சிங் ஏற்கனவே அணியில் உள்ள நிலையில் கலில் அகமதையும், அணியில் சேர்ந்து இருந்தால் இந்திய அணிக்கு அது பெரிய பலமாக மாறி இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் கம்பீர் கோட்டை விட்டார் என்பதே உண்மை.

Story first published: Wednesday, June 25, 2025, 16:01 [IST]
Other articles published on Jun 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+