மும்பை: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிக்கான ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நிகரற்ற கேப்டனாக விளங்கிய இஃப்திகார் அலி கான் மற்றும் மன்சூர் அலி கான் பட்டோடியின் பெயர் நினைவாக தான் பட்டோடி பெயர் கோப்பைக்கு வைக்கப்பட்டது.
தற்போது ஹர்யானாவிடல குர்கிராம் பகுதி தான் சுதந்திரத்திற்கு முன்பு பட்டோடி என்று அழைக்கப்பட்டது. இதன் நவாப்களான தந்தை இஃபிதகார் பட்டோடி இங்கிலாந்து கிரிக்கேட் அணிக்காக 3 டெஸ்டில் விளையாடி இருக்கிறார்.

அதன் பிறகு இந்திய அணியின் கேப்டனாக 3 டெஸ்டில் விளையாடியுள்ளார். இவருடைய மகன் மன்சூர் அலி கான் பட்டோடி இந்திய அணியை 40 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு, 9 வெற்றியை பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் 21 வயதில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார்.
அந்த சாதனை இன்று அளவும் உடைக்கப்படவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் அடியேடுத்து வைப்பதற்கு முன்பே அவருக்கு விபத்தில் ஒரு கண் பாதிக்கப்பட்டது. இதனால் வெறும் ஒரு கண் பார்வை மட்டுமே வைத்து மன்சூர் அலி கான் விளையாடினார்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு மண்ணில் மன்சூர் அலி கான் தலைமையில் தான் முதல் வெற்றியை இந்தியா பெற்றது. ஆஸ்திரேலியா இந்திய மோதும் டெஸ்ட் தொடரின் பெயர் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்று உள்ளதோ அதேபோல் இங்கிலாந்துக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட செல்லும் இந்திய அணி விளையாடும் தொடர் பட்டோடி கோப்பை என்று இருந்தது.
இந்திய கிரிக்கெட்டின் புலி என்று வர்ணிக்கப்பட்டவர்.
இவர்களின் நினைவாக இருக்கும் ஒரே விஷயம் இந்த பட்டோடி தொடர் மட்டுமே. அதை மாற்றி புதிய பெயரை வைத்துள்ளார்கள். இந்தப் பெயர் மாற்றத்துக்கு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், பட்டோலியின் மனைவி ஷர்மிளா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
உடனே சச்சின், பிசிசிஐ இடம் பேசி வெற்றி பெறும் அணியின் கேப்டனுக்கு பட்டோடியின் பெயரில் பதக்கம் வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். தொடரின் பெயர்தான் முக்கியமே தவிர சச்சின் சொல்வது போல் பதக்கம் ஒன்றை வழங்குவது ஆறுதல் பரிசை விட அபத்தமானது என்று கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இனி ஊடகங்கள் இத்தொடர்க் குறித்து எழுதும்போது தினமும் சச்சினின் பெயரையும் ஆண்டர்சன் பெயரையும் உச்சரிக்கும். படோடியின் பெயர் அந்த பதக்கம் வழங்கப்படும் ஒரு நாளை தவிர வேறு எப்பொழுதும் உச்சரிக்கப்படாது என்பதே ரசிகர்களின் கூற்றாகும்.
சச்சின் இந்திய அணிக்காக படைத்த சாதனைகளுக்கு அவர் பெயரில் தனியாக ஒரு புதிய தொடரையே உருவாக்கலாம் என்றும் ரசிகர்கள் சாடியுள்ளனர்.
90களில் கிரிக்கெட் பார்த்து வளர்ந்த ரசிகர்களையும் சச்சின் ஆண்டர்சன் மீதுள்ள அபிமானத்தையும் பயன்படுத்தி மீண்டும் ஒரு வரலாற்று நீக்கம் அரங்கேறியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் பின்னால், தற்போது ஐசிசி தலைவராக இருக்கும் ஜெய்ஷா தான் காரணம் என்றும், அவருடைய தூண்டுதல் காரணமாக தான் பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளனர்.