Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக VVS Laxman நியமிக்கப்பட வாய்ப்பு? கம்பீர் பதவிக்கு சிக்கல்

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தனி பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தற்போது இந்திய அணிக்கு மூன்று பிரிவிலும் மூன்று கேப்டன்கள் இருக்கிறார்கள். ஆனால் மூன்று விதமான போட்டிக்கும் கம்பீர் மட்டும்தான் பயிற்சியாளராக இருக்கின்றார்.

இதில் கம்பீர் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் நன்றாக செயல்பட்டாலும், அவரது வழிகாட்டுதலில் டெஸ்ட் அணி மோசமாக செயல்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் நன்றாக விளையாடினாலும் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது.

Gambhir vs Laxman

இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டெஸ்ட் போட்டிக்கு மாற்ற வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினர். இதற்கு காரணம் கம்பீர தலைமையில் கடைசியாக இந்திய அணி விளையாடிய ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் 7ல் தோல்வியை தழுவி இருக்கிறது. ஒரு வெற்றி ஒரு டிராவை இந்திய அணி வெற்றி இருக்கிறது.

இது தவிர வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றியை பெற்றிருந்தது. இதனால் கம்பீரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இந்திய அணியின் ஜாம்பவனான விவிஎஸ் லக்ஷ்மனை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே பிறந்து வளர்ந்த விவிஎஸ் லட்சுமண் டிராவிட்டை போல் அனுபவம் உடைய வீரராக இருக்கின்றார்.

இதுதான் லட்சுமணனுக்கு டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் லட்சுமணன் ஏற்கனவே தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்த போது இளம் வீரர்களுடன் நல்ல உறவை பேணி காத்தார். இதனால் தற்போது இருக்கும் அணியில் உள்ள வீரர்கள் பற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்றும் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கம்பீரை விட லக்ஷ்மன் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடிய அனுபவம் இருப்பதாகவும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற மண்ணில் எவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது லக்ஷ்மனுக்கு தான் தெரியும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஒருநாள், டி 20 போட்டிக்கு கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகவும், டெஸ்ட் போட்டிக்கு லட்சுமணன் தலைமை பயிற்சியாளராகவும் பிசிசிஐ நியமிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Friday, June 27, 2025, 12:56 [IST]
Other articles published on Jun 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+