IND vs ENG: ஒரே டெஸ்டில் 1014 ரன்கள் அடித்த இந்தியா.. தாமதமாக இந்திய அணி டிக்ளேர் செய்தது எதனால்?
பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தான் தற்போது சிக்கலை ஏற்படுத்திருக்கின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும்.
இந்த சூழலில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள நிலையில், 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு ஓவர்கள் அதிகம் தேவைப்படும். அதற்கான நேரத்தை பவுலர்களுக்கு கேப்டன் வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் நிர்ணயித்தும் இந்தியா தோல்வியை தழுவியது. மனதளவில் அது கேப்டனையும் பயிற்சியாளர் பாதிக்க செய்திருக்கிறது. இதனால் தான் இந்த போட்டியில் வெற்றி பெறாமல் போனாலும் பரவாயில்லை,இங்கிலாந்து வெற்றி பெற்று விடக்கூடாது என்ற முடிவுக்கு இந்திய அணி நிர்வாகம் வந்திருக்கின்றது.
கடைசி நாளில் ஒரு அணி எவ்வளவு முக்கினாலும் 400 ரன்கள் அல்லது 450 ரண்களுக்கு மேல் அடிப்பது சிரமம். அப்படி அதிரடியாக விளையாடும் போது நிச்சயமாக விக்கெட்களும் விழும். அப்படி இருக்க நான்காவது நாள் இறுதியில் ஒரு 25 ஓவர் விளையாடி இருந்தால் அதில் நிச்சயமாக ஒரு நூறு ரன்களையாவது இங்கிலாந்து எட்டி இருக்கும்.
அப்படி என்றால் இந்திய அணி இங்கிலாந்துக்கு 500 ரன்கள் அல்லது 550 ரகளை இலக்காக நிர்ணயித்திருந்தபோதே டிக்ளேர் செய்து பந்து வீச தொடங்கிருக்க வேண்டும். ஆனால் இந்திய அணி கூடுதலாக 600 ரன்களை கடக்கும் வரை காத்திருந்து டிக்ளேர் செய்தது. தற்போது இந்தியாவுக்கு சரிவை ஏற்படுத்திருக்கின்றது.
ஏனென்றால் 90 ஓவரில் நாளை ஏழு விக்கெட்டுகளை இந்தியா எடுக்க வேண்டும். இதில் மழை பாதிப்பு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்திய அணி இங்கிலாந்துக்கு 500 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க வேண்டும்.
ஆனால் கூடுதலாக 108 ரன்கள் அடிக்கும் வரை இந்தியா தாமதித்து விட்டது. ஒருவேளை நாளை இங்கிலாந்து அணியின் 7 விக்கெட்டுகளையும் எடுக்க நேரம் இல்லாமல் போய்விட்டால் தாமதமாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் டிக்ளர் செய்ததுதான் இதற்கு மிகப்பெரிய காரணம் என்று கூறப்படும்.
இதனால் கம்பீரையும் கில்லையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்திய பவுலர்கள் கிடைக்கும் ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது என்று சொல்வார்களே, அதே போல் இந்தியா தாமதமாக டிக்ளேர் செய்ததால் தற்போது ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 1014 ரன்கள் அடித்து சாதனை படைத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications