Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Cricket Memes: ஒருபக்கம் அந்தாளு மகன்.. இன்னொரு பக்கம் அந்தாளு மருமகன்.. ரோகித்தை வெளுக்கும் ஃபேன்ஸ்

விசாகப்பட்டினம் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

”பீமா” படத்தில் மார்க்கெட்டை காலி செய்ய துடிக்கும் வில்லன்களை எந்தவித முன்யோசனையும் இன்றி விக்ரம் அடித்துவிடுவார். அதன்பின் 30க்கும் மேற்பட்ட ஆட்களை வில்லன்கள் கூட்டிட்டு வர, ஒற்றை ஆளாக எல்லோரையும் பந்தாடுவார். தாமதமாக வந்த அவரது ஆட்களிடம் தலைவாசல் விஜய், ”நீங்க லேட்.. அவன் ஒருத்தனே முடிச்சிட்டான்” என்பார். அதனை அப்படியே ஜெய்ஸ்வாலுக்கு மாற்றி, ”நீங்க அடிக்க வேண்டியது எல்லாம் அவன் அடிச்சிட்டு இருக்கான்” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

IND vs ENG : Fantastic memes from Social Media after India Scored 336 runs on the day 1 of the 2nd Test against England


இங்கிலாந்து அணியின் இளம் ஸ்பின்னரான சோயப் பஷீர் நேற்றைய ஆட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அவருக்கு விசா தாமதமாக அளிக்கப்பட்டதால் முதல் டெஸ்டில் விளையாட முடியவில்லை. இதுகுறித்து ரோகித் சர்மா, நான் ஒன்றும் விசா அலுவலகத்தில் பணியாற்றவில்லை என்று நக்கலாக பதில் அளித்தார். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி சோயப் பஷீர் பதிலடி கொடுத்தார். அதனை வில்லேஜ் குக்கிங் சேனலில் சொல்லும், ”மஞ்சளில் இருந்து ஆரம்பிப்போம்” என்பதை மாற்றி பஷீருக்கு மாற்றி, ரோகித் சர்மாவில் இருந்து ஆரம்பிப்போம் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள குபீர் ரகம்.

எம் - மகன் படத்தில் நாசரின் கொடுமை தாங்காமல் வடிவேலு, எங்க அக்கா வாக்கப்பட்டு சீரழியுறா.. நான் வாக்கப்படாமலேயே சீரழியுறேன் என்று கூறுவார். சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கருடன் இளம் வீரர் சுப்மன் கில் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதனை நக்கல் செய்யும் செய்யும் வகையில், ”மும்பை அணியின் கேப்டனாக இருந்தா சச்சின் மகன் கிட்ட மாட்றேன்.. இந்திய அணியின் கேப்டனாக இருந்தா.. அந்தாளு மருமகன் கிட்ட மாட்றேன்” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

நேற்று நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அரசியலுக்காக விலகியதால், "Its time to leave Cinema thalapathy" என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிடது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளாகவே மோசமான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்தி வரும் நிலையில், "Its time to leave cricket da rohit" என்று மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி ரகம்.

IND vs ENG : Fantastic memes from Social Media after India Scored 336 runs on the day 1 of the 2nd Test against England
IND vs ENG : Fantastic memes from Social Media after India Scored 336 runs on the day 1 of the 2nd Test against England
Story first published: Saturday, February 3, 2024, 8:44 [IST]
Other articles published on Feb 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+