For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 
ஒரு சின்னப்பையன் எகிறி எகிறி அடிச்சான் சார்.. புலம்பும் ஆண்டர்சன்.. பேஸ்பாலை வெளுக்கும் மீம்ஸ்!

ராஜ்கோட் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாளின் சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் நீயா நானா நிகழ்ச்சியில் காதல் செய்வர்கள், அவர்களின் நண்பர்கள் பங்கேற்ற விவாதத்தின் போது பிரவீன் என்பவர், "சின்னப்பையன்லாம் எகிறி எகிறி அடிச்சான் சார்.. அவனுக்கு என்ன செஞ்சேனே தெரியலை" என்று சொல்லுவார். இன்று வரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டில் இருக்கும் வீடியோ அது. அதனை ஆண்டர்சன் பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்சர் அடித்த ஜெய்ஸ்வாலை ஒப்பிட்டு, பேஸ்பால் பற்றி ஆண்டர்சன் பேசுவதாக, "பேஸ்பால்-னு உசுப்பேத்தி ஒரு சின்னப்பையன் எகிறி எகிறி அடிச்சான் சார்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IND vs ENG : Fantastic Memes from Social Media after India won by 434 Runs against England in the 3rd Test at Rajkot

அறிமுக போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலமாக அறிமுக போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனை பில்லா 2 படத்தில் அஜித் குமார், "ஆசை இல்லை அண்ணாச்சி.. இது பசி" என்று வசனம் கூறுவார். அதனை சர்பராஸ் கானுடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

IND vs ENG : Fantastic Memes from Social Media after India won by 434 Runs against England in the 3rd Test at Rajkot

கடந்த முறை ஆண்டர்சன் இந்தியாவுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்ட போது, ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து மிரள வைத்தார். தற்போது இளம் வீரரான ஜெய்ஸ்வால் ஆண்டர்சன் பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அலற வைத்துள்ளார். இதனை துப்பாக்கி விஜய் மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தினை ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் தரமான செய்கை.

IND vs ENG : Fantastic Memes from Social Media after India won by 434 Runs against England in the 3rd Test at Rajkot

7வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், 2வது முறையாக இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். நேற்று இரட்டை சதம் விளாசிய ரன்னை எடுக்க ஓடிய போதே ஜெய்ஸ்வால் கொண்டாடுவதற்கு முன் சக வீரரான சர்பராஸ் கான் கைகளை உயர்த்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனை எல்லாம் அவன் செயல் வடிவேலு, அடி வாங்கியதை நினைத்து பார்ப்பதை போல் ரசிகர்கள் விராட் கோலியின் சதத்தை ரெய்னா கொண்டாடிய காட்சிகளை நினைத்து பார்ப்பதாக உருவாக்கப்பட்ட நால்டால்ஜியா மீம் செண்ட்மெண்டல் டச்.

IND vs ENG : Fantastic Memes from Social Media after India won by 434 Runs against England in the 3rd Test at Rajkot

இந்திய அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஒரு முறை கூட 30 ரன்களை கடக்கவில்லை. இதுவரை 77 ரன்களும் அடித்துள்ள அவர், பவுலிங்கில் 107 ஓவர்களை வீசியுள்ளார். பேட்ஸ்மேனாக அடித்த ரன்களை விடவும் பவுலராக வீசிய ஓவர்கள் அதிகமாக உள்ளது. இதனை ரெண்டு படத்தில் போண்டா மணி, "பெட்டிக்குள்ள போன பாய் இங்க வந்துட்டேன்" என்று கூறுவார். அதுபோல் ஜோ ரூட், 'பேட்டிங் ஆல்ரவுண்டரா இருந்தவன்.. பவுலிங் ஆல்ரவுண்டரா வந்துட்டேன்" என்று சொல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி ஜிம்கானா ரகம்.

IND vs ENG : Fantastic Memes from Social Media after India won by 434 Runs against England in the 3rd Test at Rajkot
Story first published: Monday, February 19, 2024, 13:42 [IST]
Other articles published on Feb 19, 2024
English summary
IND vs ENG : Fantastic Memes from Social Media after India won by 434 Runs against England in the 3rd Test at Rajkot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+