Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : மிஸ்டர் குல்தீப் யாதவ்.. இனி மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்க.. தெறிக்கும் மீம்ஸ்!

ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 131 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று யார் பவுலிங் செய்தாலும் அசராமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதன் மூலமாக இவர் ஆட்டமிழக்கும் போது இந்திய அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களை விடவும் அதிக பந்துகளை குல்தீப் யாதவ் எதிர்கொண்டிருந்தார். இதனை அரசு படத்தில் அரசு பணி கிடைத்த வடிவேலுவாக குல்தீப் யாதவை மாற்றி, டேய் பிச்சுமணி என்று ரசிகர்கள் அழைப்பது போலவும், அதற்கு குல்தீப் யாதவ், மிஸ்டர்.பிச்சுமணி.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள் என்று சொல்வதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IND vs ENG : Fantastic Memes from Social media after the day 3 of the Test match between India - England at Ranchi

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 19 ரன்களை எடுத்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் 4 ஆயிரம் ரன்களை விளாசிய 17வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதில் ரோகித் சர்மா முதல் ஆயிரம் ரன்களை 33 இன்னிங்ஸ்களிலும், அடுத்த ஆயிரம் ரன்களை 18 இன்னிங்ஸ்களிலும், 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை 23 இன்னிங்ஸ்களிலும், 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை 26 இன்னிங்ஸ்களிலும் விளாசியது தெரிய வந்தது. இதனால் ரோகித் சர்மா ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் ராம் சரணுடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

IND vs ENG : Fantastic Memes from Social media after the day 3 of the Test match between India - England at Ranchi

பேஸ்பால், பேஸ்பால் என்று பேசிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது, 9வது விக்கெட்டுக்கு 12 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே எடுத்து விளையாடியது. இதனை கோவை பிரதர்ஸ் படத்தில் வடிவேலு சாமி கும்பிடுவதாக கூறி தூங்கிவிடுவார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு, "சார் தூங்கிட்டாங்க சார்" என்று இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல் ஃபன்.

IND vs ENG : Fantastic Memes from Social media after the day 3 of the Test match between India - England at Ranchi

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, டெய்லெண்டர்களுடன் இணைந்து துருவ் ஜுரெல் இந்திய அணியின் ஸ்கோரை 307 ரன்களாக உயர்த்தினார். அரைசதம் அடித்து தந்தைக்கு சல்யூட் வைத்த ஜுரெல்லுக்கு, ரசிகர்கள் சல்யூட் அடிப்பதை போல் சலார் படத்தின் பிரபாஸ் நடந்து வருவதை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி ரகம்.

IND vs ENG : Fantastic Memes from Social media after the day 3 of the Test match between India - England at Ranchi

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ராபின்சன் ஒரே ஓவரில் 2 நோ-பால்களை வீசி பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். அப்போது ராபின்சனின் நோ-பால் வரலாறு குறித்த டேட்டாக்கள் காட்டப்பட்டன. அதில் இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள ராபின்சன் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 77 நோ-பால்களையும் வீசியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை வடிவேலு பாணியில், விளையாடுறது 20வது டெஸ்ட் போட்டி.. அதில் 77 நோ-பால் வேற.. என்று கிண்டல் செய்து உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

IND vs ENG : Fantastic Memes from Social media after the day 3 of the Test match between India - England at Ranchi
Story first published: Monday, February 26, 2024, 8:58 [IST]
Other articles published on Feb 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+