Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: தோல்விக்கு பின் அழுகுணி ஆட்டம் ஆடும் இங்கிலாந்து.. நடுவர் மீது பழியை போடும் முன்னாள் வீரர்கள்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது.

இந்தியாவின் வெற்றிக்கு நான்கு விக்கெடுகள் தேவையாக இருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

Ind vs Eng

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். இதனிடையே வழக்கம் போல் இந்தியா வெற்றி பெற்ற பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் அழுகுணி ஆட்டம் ஆடுகிறார்கள்.

போட்டி நான்காவது நாள் முடிந்து இருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும் என்று குறிப்பிட்டுள்ள நாசர் உசைன், நடுவர்கள் தவறு செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசி அவர், "திங்கட்கிழமை வேலை ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க பெருமளவு பணத்தை செலவழித்து இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியிருந்தது அவர்களுக்கு ஆட்டத்தின் கிளைமாக்ஸ் நான்காவது நாளிலே அரங்கேற அனுமதித்து இருக்க வேண்டும்."

"நான்காவது நாளில் இந்த போட்டி நடந்திருந்தால் ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றிக்கு தேவையான 35 ரன்கள் அடித்திருக்கலாம். ஆட்டம் மேலும் 42 முதல் 43 நிமிடம் வரை நடத்தலாம் என்ற விதி இருந்த போதும். ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை."

"நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும். இரண்டு அணிகளில் யாராவது ஒருவர் கூட நாங்கள் நாளை விளையாடுகிறோம் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. நடுவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு என்பதே கிடையாது. நேற்று ஆட்டம் நடைபெறாமல் இருந்தது நிச்சயம் அவமானம் தான்" என்று நாசர் உசேன் கூறியிருந்தார். இதுபோன்று ஜெமி ஓவர்டன் இன்று பேட்டிங் செய்தபோது சிராஜ் வீசிய பந்து அவரது காலை தாக்கியது.

இதற்கு நடுவர் குமார தர்மசேனா நீண்ட நேரம் யோசித்து அவுட் வழங்கினார். இதற்கு இங்கிலாந்து எடுத்த டி ஆர் எஸ் முடிவில், ஸ்டெம்பில் பந்து லேசாக பட்டது போல் கிராஃப்ட் காட்சியில் கணிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு பந்து லேசாக ஸ்டெம்பில் பட்டால், நடுவர் எந்த முடிவை அறிவிக்கிறாரோ அதுதான் இறுதி முடிவாகும். இதனை குறிப்பிட்டு பேசிய இங்கிலாந்து வீரர்கள் மைக்கேல் ஆத்தர்டென், நாசர் உசைன் ஒருவேளை நடுவர் இதற்கு நாட் அவுட் வழங்கியிருந்தால் அது நாட் அவுட் ஆகியிருக்கும் என்று கூறினர். இதற்கு பதிலடி தந்துள்ள இந்திய ரசிகர்கள் தோல்வியை தழுவிய பிறகு வழக்கம் போல் இங்கிலாந்து வீரர்கள் அழுகுணி ஆட்டம் ஆடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Monday, August 4, 2025, 19:48 [IST]
Other articles published on Aug 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+