Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: சுப்மன் கில், கம்பீர் எடுத்த மோசமான முடிவு.. இவரை ஏன் அணியில் எடுத்தாங்க?

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய பிளையிங் லெவனின் மூன்று மாற்றங்கள் செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி தொடரை வென்று விடும். இதன் காரணமாக எப்படியாவது இந்திய அணி வெற்றியை ருசிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறது.

Ind vs Eng

ஆடுகளமும் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக புற்கள் அமைக்கப்பட்டிருப்பதால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அதற்கு பௌலிங் பலமாக இருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் நான்கு வேக பந்துவீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள். ஆனால் இந்திய அணி தற்போது மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துதான் களமிறங்குகிறது.

அது மட்டுமில்லாமல் பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் ஓய்வை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன ஆர்ஸ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் ரன்களை வாரி வழங்கும் பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்தியா நிர்வாகம் வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதேபோன்று முழு உடல் தகுதியை பெற்றுள்ள ஆகாஷ் தீப்பும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கும் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் அணியில் இருந்தார். இது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் அவரை பயன்படுத்திருக்க வேண்டும்.

ஆனால் இந்திய அணி பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக கருணாயருக்கு வாய்ப்பு இருக்கின்றது. இது இந்திய அணி நிர்வாகம் எடுத்த தவறான முடிவாக பார்க்கப்படுகிறது. ஆர்ஸ்தீப் சிங் அணியில் தேர்வு செய்யப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, July 31, 2025, 15:42 [IST]
Other articles published on Jul 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+