Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்திய அணி தொடரை இழந்தால், கம்பீர் பதவியை விட்டு தூக்கி எறியப்படுவார்.. இதை பாருங்க

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இழந்து விடும். இது கௌதம் கம்பீருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை கிரிக்கெட் வல்லுனர்கள் தந்துள்ளனர்.

ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 13 போட்டிகளில் வெறும் நான்கு ஆட்டங்களில் மட்டும் தான் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.

Gautam Gambhir

எட்டு போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் சமனும் அடைந்துள்ளது. இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் இந்தியா தடுமாறினாலும் பின்னர் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி கம்பீருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதில் கம்பீர் 11 போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட்டு 8 போட்டிகளில் வெற்றி இரண்டு போட்டிகளில் தோல்வி ஒரு ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

அதேபோன்று டி20 கிரிக்கெட்டில் கம்பீரின் பயிற்சியாளர் ரெக்கார்ட் அபாரமாக இருக்கின்றது. மொத்தமாக விளையாடிய 15 போட்டியில் 13 போட்டிகளில் வெற்றி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கின்றது. இந்த ரெக்கார்டை பார்த்தால் பயிற்சியாளர் கம்பீர் வழிகாட்டுதலில் இந்தியா ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறுவது தெரிய வந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் தான் இந்தியா வென்றது தொடர்ந்து நியூசிலாந்து இங்கு ஆஸ்திரேலியா போன்ற தொடர்களில் இந்தியா தோல்வியை தழுவிய அளவில் தற்போது இங்கிலாந்து தொடரும் கையை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் இங்கிலாந்து தொடரில் முடிவை பொருத்தே கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் அதிரடியாக நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஒருவேளை கம்பீர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மன் அந்த பொறுப்புக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Sunday, July 27, 2025, 13:07 [IST]
Other articles published on Jul 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+