IND vs ENG: கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்? கோலியின் ஸ்டைலை மாற்றும் கம்பீர்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் கருண் நாயர் திடீரென்று சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது தெரிய வந்திருக்கிறது.
லண்டன் ஓவல் ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழக்க வாய்ப்பு இருக்கின்றது. இதனால் பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக தான் கருண் நாயரை இந்திய அணி நிர்வாகம் சேர்த்து இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணி பண்ட் இல்லாமல் பேட்டிங் பலவீனமாக காட்சியளிக்கின்றது. நடு வரிசையில் ஒரு நிலையான வீரர் தேவை. இதன் காரணமாகத்தான் ரிஷப் பந்த இடத்தில் கருண் நாயரை கம்பீர் சேர்த்து இருக்கலாம் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதேபோன்று பண்ட் இடத்தில் தான் கருண் நாயர் களமிறங்க போகிறார் என பேட்டிங் வரிசையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே கம்பீர் மிகவும் தற்காப்பு மனநிலையில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் கம்பீரே தங்களுடைய பேட்ஸ்மேன்கள் மீது நம்பிக்கை இல்லாமல் கூடுதலாக ஒரு பேட்டரை களமிறக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவே விராட் கோலியாக இருந்தால் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை களம் இறக்கி இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்திருக்கலாம் என்று திட்டம் போட்டு இருப்பார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி இப்படி தற்காப்பு மனநிலையில் பல ஆண்டுகளாக இருந்தபோது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தான் இந்திய அணியின் மனநிலையை மாற்றி வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தை கொண்டு வந்தனர் .ஆனால் தற்போது கம்பீர் அந்த உத்வேகத்தில் இருந்து பின்வாங்கி மீண்டும் தற்காப்பு மனநிலையை இந்திய வீரர்களிடம் வளர்த்து வருவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications