Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்திரி vs டிராவிட் vs கம்பீர் ரெக்கார்டு.. இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலே இருந்திருக்கலாம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியர் தான் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்கள். இது இந்திய அணிக்கு ஒரு நல்ல திருப்புமுனையாகவே அமைந்தது என்று சொல்லலாம். ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் அணியாக விளங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரை இந்திய அணி தகுதி பெற்றது. அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

India coaches record

இதேபோன்று இங்கிலாந்து மண்ணில் தொடரை சமன் செய்வது தென்னாப்பிரிக்க டெஸ்டில் வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் வெற்றி, இந்திய மண்ணில் அசைக்க முடியாத ஒரு அணியாக ரவி சாஸ்திரி வழிகாட்டுதலில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் கிங்காக இருந்தது.

இந்த சூழலில் ரவி சாஸ்திரி மற்றும் அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கிடையே மோதல் ஏற்பட்டதால் ரவி சாஸ்திரி அந்த பயிற்சியாளர் பொறுப்பை விட்டு விலகினார். ரவி சாஸ்திரி வழிகாட்டுதலில் இந்திய அணி 43 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 25 வெற்றி, 13 தோல்வி, ஐந்து சமன் ஆகிய ரெக்கார்டு வைத்திருந்தது.

இந்த நிலையில் தான் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வந்தார். டிராவிட் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் மட்டுமில்லாமல் ஒரு நாள்,டி20 கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக விளையாடியது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை இந்திய அணி சென்று தோல்வியை தழுவியது.

2024 டி20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்திய இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்குள் சென்றது. அதுமட்டுமல்லாமல் ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் இந்திய அணி 24 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 14 வெற்றி, ஏழு தோல்வி மூன்று சமன் அடைந்திருந்தது. இந்த தருணத்தில் தான் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக்குவதாக அறிவித்திருந்தார்.

அப்போது கேப்டனாக இருந்த ரோகித் சர்மா குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினார். எனினும் டிராவிட் அந்த பதவியில் இருந்து விலகினார். கம்பீர் தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கை வைத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்ததாக குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது.

கம்பீர் தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை தழுவியது. எனினும் டி20 போட்டிகளில் கம்பீர் பயிற்சியாளராக அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். இதனால் தொடர் வெற்றிகளையும் இந்தியா பெற்றது. எனினும் இந்தியா இதுவரை பல ஆண்டுகளாக தோற்காத இடத்தில் எல்லாம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு தோற்றது.

இதில் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி, ஆஸ்திரேலியா மண்ணில் மூன்றுக்கு ஒன்று என்ற கணத்தில் தோல்வி என இந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்கின்றது. கம்பீர் வழிகாட்டுதலில் 13 டெஸ்ட் போட்டி விளையாடியுள்ள இந்திய அணி வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இதில் இரண்டு போட்டி வங்கதேசத்துக்கு எதிராகவும், 7 போட்டிகளில் இந்தியா தோல்வியையும் தழுவி இருக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்து.
இருக்கிறது. கம்பீர் வழிகாட்டுதலில் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ரசிகர்கள் மத்தியில் தப்பித்து இருக்கிறார். ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தால், அவர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும்.

Story first published: Friday, June 27, 2025, 12:21 [IST]
Other articles published on Jun 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+