For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜெய்ஸ்வாலை நாயுடன் ஒப்பிட்ட ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்ட்.. ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலை நாயுடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து இந்தியா அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.

இதில் ஜெய்ஸ்வால் மிகப்பெரிய பங்களிப்பை அணிக்கு தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜெய்ஸ்வால் ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடி 391 ரன்கள் அடித்தார்.இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதம் அடங்கும்.

Gilchrist Compares Jaiswal with dog created controversy

பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு ஜெய்ஸ்வாலின் ஆட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் குறித்து பேசிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட், ஜெய்ஸ்வாலை இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பாராட்டினார்.

அப்போது பேசிய அவர் ஜெய்ஷ்வால் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். இந்திய வீரர்கள் வெளிநாட்டு மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர் காட்டியிருக்கிறார்.எனினும் இன்னும் அவர் வெளிநாட்டு மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கொஞ்சம் கற்க வேண்டும்.

களத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும்.எனினும் இதனை அவர் சிறப்பாக கையாள்வார் என நம்புகிறேன். ஸ்டார்க், ஜெய்ஸ்வால் இடையே நடந்த விவாதம் உண்மையிலே கிரிக்கெட்டுக்கு நல்லது. எல்லா நாய்களுக்கும் ஒரு நாள் வரும். ஜெய்ஸ்வாலுக்கு அந்த நாள் அமைந்துவிட்டது. எனவே அவர் எங்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினார்.

எனினும் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஸ்டார்க் அபாரமாக செயல்பட்டு அவனுடைய விக்கெட்டை வீழ்த்தினார். இதுதான் கிரிக்கெட்டின் உண்மையான அழகு. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த வாக்குவாதம் நன்றாக தான் இருந்தது என்று கில்கிறிஸ்ட் கூறினார். இதில் எல்லா நாய்களுக்கும் ஒரு நாள் வரும் ஜெய்ஸ்வாலுக்கு அந்த நாள் அமைந்துவிட்டது என்று ஜெயிஸ்வாலை நாயுடன் ஒப்பிட்டு கில்கிறிஸ்ட் பேசியிருப்பதாக இந்திய ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Wednesday, June 18, 2025, 23:39 [IST]
Other articles published on Jun 18, 2025
English summary
Ind vs Eng- Gilchrist Compares Jaiswal with dog created controversy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+