Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கா கேப்டன் பதவி இல்ல.. சம்பவம் செய்ய போகும் ஹர்திக் பாண்டியா.. மாபெரும் ரெக்கார்டுக்கு வாய்ப்பு

கொல்கத்தா : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவும், துணை கேப்டனாக அக்சர் பட்டேலும் விளையாட இருக்கின்றனர். இந்த போட்டியில் ஒரு சாதாரண ஆல் ரவுண்டராக தான் பங்கேற்கிறார். இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு டி20 போட்டிகள் ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் ஆக செயல்பட போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது.

ind vs eng hardik pandya suryakumar yadav

ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால், அவருக்கு பதிலாக முழு நேர கேப்டனாக சூரியகுமார் யாதவை தேர்வுக்குழுத் தலைவர் அகார்கர் நியமித்தார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தமக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருக்கிறார் என்ற சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஹர்திக் பாண்டியா ஒரு மாபெரும் ரெகார்டை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் அவர் இந்த தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினால், இங்கிலாந்து எதிராக இந்த டி20 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவர் பெறுவார். அது மட்டுமல்லாமல் வெறும் மூன்று விக்கெட்டுகளை இந்தத் தொடரில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினால் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாகல் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் 11 விக்கெட் வீழ்த்தினால் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அதிக விக்கெட் வீழ்த்திய கிறிஸ் ஜார்டன் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தற்போது டி20 போட்டிகளில் 1700 ரன்களும் 89 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் 11 விக்கெட் ஹர்திக் இந்த தொடரில் கைப்பற்றுவதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் 1500 ரன்கள் பேட்டிங்களும் 100 விக்கெட்டுகளை பவுலிங்களும் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் ஹர்திக் பாண்டியாவுக்கு சேரும். இதற்கு முன்பு மட்டும் தான் உலக அளவில் இந்த ரெக்கார்டை ஷகிபுல் ஹசன் மட்டும்தான் படைத்திருக்கிறார்.

Story first published: Wednesday, January 22, 2025, 9:22 [IST]
Other articles published on Jan 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+