Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: துருவ் ஜூரல் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? ஹர்திக் மீது தவறு இல்லை.. ராயுடு கருத்து

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா வெறும் 114 என்ற ஸ்டிரைக் ரேட் இருந்தால் 35 பந்துகளில் அவர் 40 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும்.

இதேபோன்று ஆட்டத்தில் 18வது ஓவரில் கடைசி பந்து ஜுரச் ஒரு ஷாட் அடித்தார். ஆனால் சிங்கிள்ஸ் ஓட ஹர்திக் பாண்டியா மறுத்துவிட்டார். இதன் காரணமாக அடுத்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழந்துவிட்டார்.

ind vs eng hardik pandya vs

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய அணி வீரர்கள் நன்றாகவே விளையாடினார்கள். அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது என்பது கடினமாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் விக்கெட்டுகளும் இறுதிக்கட்டத்தில் விழுந்தது. எனவே ஹரிதிக் பாண்டியா இன்னிங்ஸை நல்ல முறையில் தான் கட்டமைத்து இருந்தார்".

"எனினும் கடைசி ஓவர்களில் கொஞ்சம் அதிரடி காட்டி இருக்க வேண்டும். அந்த சூழலில் ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல் மீது கொஞ்சம் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். கடைசி ஓவரில் 25 ரன்கள் அடிக்க வேண்டும் என்று ஒரு நிலை இருந்தால் கூட ஹர்திக் பாண்டியாவால் பெரிய சாட் ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்க முடியும்".

"எனவே துருவ் ஜூரல் மீது கொஞ்சம் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இதனால் போட்டி இன்னும் கொஞ்சம் க்ளோசாக சென்று முடிந்திருக்கும். எனினும் ஹர்திக் பாண்டியா நல்ல முறையில் விளையாடி இருக்கிறார்".

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்த்தீவ் பட்டேல், "பேட்ஸ்மேன்கள் தங்களின் நிலைநிறுத்திக் கொள்ள 20 முதல் 25 பந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.நீங்கள் சிங்கிள்ஸ் எடுத்துக்கொண்டு ரன்களை சேர்த்து இருக்கலாம். ஹர்திக் 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அவர் பல பந்துகளை வீணடித்து விட்டார்" என்று பார்த்தீவ் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 29, 2025, 20:00 [IST]
Other articles published on Jan 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+