Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு கேப்டன் பதவி வேண்டுமா ஹர்திக்? இதை செய்தால் கிடைக்கும்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் அட்வைஸ்

மும்பை : ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்ட போதோ, இல்லை ஓய்வில் இருந்த போதெல்லாம் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் செயல்பட்டார். இந்த நிலையில் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஹர்திக் பாண்டியா முழு நேர கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் புதிய பயிற்சியாளர் கம்பீரும், புதிய தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரும், ஹர்திக் பாண்டியாவை ஓரம் கட்டிவிட்டு சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமித்திருக்கிறார்கள். இது முதலில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்திய அணிக்கு 16 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக தலைமை தாங்கி 11 போட்டிகளில் வெற்றி பெற வைத்தார்.

ind vs eng hardik pandya suryakumar yadav

மேலும் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் துணை கேப்டன் ஆகவும் ஹர்திக் பாண்டியா தான் இருந்தார். இப்படி இருக்கும் போது ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், "இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மாறியதில் இருந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது".

"ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை வேறு மாதிரியாக அணுகுகிறார்கள். ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை அவர் அடுத்த கேப்டனாக வரவேண்டும் என்றால் அதற்கு தான் தயாராக இருக்கிறேன் என்பதை காட்ட வேண்டும். ஹர்திக் பாண்டியா முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது கிடையாது. அதை மட்டும் அவர் தொடர்ந்து விளையாடினால் அடுத்த கேப்டன் ஆவதற்கான அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கின்றது".

"ஐசிசி தொடர்களில் ஹர்திக் பாண்டியா சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். 2019 உலகக்கோப்பையும் ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் எல்லாம் ஹர்திக் பாண்டியா தான் பந்து வீசினார் என்பதை பலரும் மறந்து விட்டார்கள். ஆட்டத்தின் நடுக்கட்டங்களில் களத்தில் இருக்கும் வீரர்கள் அதிகமாக ஓட வேண்டும்".

"டி20 பொறுத்தவரை அது வித்தியாசமான அழுத்தத்தை வீரர்களுக்கு கொடுக்கும். ஒரு நாள் கிரிக்கெட் பொறுத்தவரை உடல் அளவில் நாம் அதிகமாக அணிக்காக கொடுக்க வேண்டியிருக்கும். அதுவும் ஆல்ரவுண்டர் என்றால் பந்துவீச்சில் 7 முதல் 10 ஓவர்கள் வீசி விட்டு பேட்டிங்கில் ஐந்தாவது அல்லது ஆறாவது வீரராக இறங்கி விளையாட வேண்டும். இதனால் உடல் தகுதி என்பது மிகவும் முக்கியம்"என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, January 28, 2025, 16:44 [IST]
Other articles published on Jan 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+