IND vs ENG:இங்கிலாந்துக்கு இந்த இந்திய வீரர் தான் ஆபத்தானவர்..இவருடைய ஈகோவை வீழ்த்த வேண்டும்- பிராட்
மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இங்கிலாந்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஆக இருப்பார் என முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் எச்சரித்துள்ளார். மார்ச் 5 அன்று நடக்கும் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியாவை கட்டுப்படுத்த இங்கிலாந்துக்கு அவர் கூறிஆலோசனைகளை கூறியுள்ளார்.
ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினால், பாண்ட்யா வழக்கமான களமிறங்கும் நேரத்திற்கு முன்னரே பேட்டிங் செய்ய வர நேரிடும் என்று பிராட் தெரிவித்தார். இதனால், இன்னிங்ஸை கட்டமைக்கும் கூடுதல் பொறுப்பு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, இயல்பான ஆட்டத்தை பாதிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் சீரற்று உள்ளது. நமிபியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதங்கள் அடித்திருந்தாலும், கடினமான போட்டிகளில் எதிரணிகள் அவருக்கு செருக்கடிகளை ஏற்படுத்தின. இங்கிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியாவின் புள்ளிவிவரங்கள் சிறப்பாகும். 18 இன்னிங்ஸ்களில் 148.39 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 414 ரன்களையும், 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நான் இங்கிலாந்து பந்துவீச்சாளராக இருந்தால், 12 ஓவர்களுக்குப் பிறகு அவரை களமிறங்கச் செய்ய வேண்டும். அப்போது அவர் உடனடியாக அதிரடி ஆட்டத்திற்குச் செல்ல மாட்டார். கடைசி நான்கு ஓவர்களில் அவர் எங்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு முன், அவரை அவுட்டாக்குவதற்கு அதுவே என் வாய்ப்பு. டெத் ஓவர்களில் இந்தியா மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தால், 200 ரன்களுக்கு மேல் குவித்துவிடுவார்கள், அப்போது நீங்கள் சிக்கலில் சிக்குவீர்கள்," என்று 'பிராட் கூறினார்.
"இந்தியா முதல் பத்து ஓவர்களில் சிறப்பாக ஆடினால், ஹர்திக் பாண்டியா பெரிய அச்சுறுத்தலாவார். அவர் களமிறங்கும் போது, மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார். அவரிடம் ஒரு ஈகோ உண்டு. தன்னால் இந்த வேலையைச் செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார். மெலிந்த உடலுடன் இருக்கும் அவர், 100 மீட்டருக்கு பந்தை எப்படி அடிக்கிறார் என்று ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் அதை அவர் மிக எளிதாகச் செய்கிறார்."
இந்தியா - இங்கிலாந்து அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல்லில் பாண்டியா பெரும்பாலான ஆட்டங்களை இங்கு விளையாடினாலும், சர்வதேச அளவில் அவரது சாதனை இங்கு சிறப்பாக இல்லை. ஐந்து ஆட்டங்களில் 47 ரன்களும், இரண்டு விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications