IND vs ENG: 91 பந்துகளில் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு வில்லனாக மாறிய ஹாரி புரூக்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 100 கோடி மக்களின் கனவை ஹாரி புரூக் தனது சதம் மூலம் உடைத்து விட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்துவிடும்.
இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் கடைசி இன்னிங்சில் அதிகபட்சமாக வெற்றிகரமாக துரத்தப்பட்ட இலக்கு 263 ரன்கள் தான். ஆனால் இந்திய அணி 374 ரன்கள் என்ற இலக்கை கடைசி இன்னிங்சில் நிர்ணயித்தது.

இதன் மூலம் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு தகுந்தார் போல் இரண்டாவது இன்னிங்ஸை ஜாக் கிராலி 14 ரன்களிலும், டக்கட் 54 ரன்களிலும் ஆலி போப் 27 ரன்களிலும் ஆட்டமிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது.
அப்போது பேட்டிங் செய்ய வந்த ஜோ ரூட், ஹாரி புரூக் ஜோடி அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக ஹாரி புரூக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிராஜ் கேட்ச் பிடித்து விட்டு 6 மிதித்து விட்டார். இதனால் இது நமது நாள் என புரிந்து கொண்ட புரூக் தொடர்ந்து அதிரடி காட்டி 91 பந்துகளில் சதம் அடித்தார்.
இதன் மூலம் ஹாரி புரூக் தன்னுடைய ஐம்பதாவது இன்னிங்சில் 10 சதம், 13 அரை சதம் அடித்திருக்கின்றார். இதில் அவருடைய சராசரி 58 என்ற அளவில் இருக்கின்றது. இதனால் வெற்றிக்கு தேவையான இலக்கு வெறும் 100 ரன்களுக்கு கீழ் சென்று விட்டதால், இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது.
களத்தில் பில்டிங் செய்து கொண்டிருந்தபோது ஹாரி புரூக்கும் இந்திய வீரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பேட்டிங்கில் பதிலடி கொடுத்து அசத்திருக்கின்றார். இதில் 98 பந்துகளை எதிர்கொண்ட ஹாரி புரூக் 111 ரன்களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சு மீண்டும் சிராஜிட்மே கேட்ச் ஆகி வெளியேறி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications