Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிச்ச அடி அப்படி.. ஹர்சித் ரானாவை ஊருக்கு அனுப்பிய பிசிசிஐ.. ரசிகர்களின் கோபத்திற்கு பணிந்த கம்பீர்

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த சூழலில் முதல் டெஸ்டில் விளையாடிய சில வீரர்களை நீக்கிவிட்டு புதிய வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், பும்ரா உடல் தகுதியுடன் இருக்கிறாரோ, இல்லையோ குல்தீப் யாதவை அணியில் தயவு செய்து கொண்டு வாருங்கள். சர்துல் தாக்கூருக்கு பதிலாக அவர் அணியில் இடம்பெற வேண்டும். ஏனென்றால் பிர்மிங்காம் மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவும் என்று நான் நம்புகிறேன்.

Harshit Rana

அந்த ஆடுகளத்தில் லெக் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் வெறும் ஆறு ஓவர் மட்டுமே வீசி 38 ரன்கள் எடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து மொத்தம் அவர் ஐந்து ரன்கள் தான் அடித்திருந்தார்.

எனினும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஓவரில் பென் டக்கட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடர்ந்து இரண்டு பந்துகளில் வீழ்த்தி இருந்தார். எனினும் சர்துல் தாக்கூர் பேட்டிங் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாதது. அவருக்கு மைனஸ் ஆக மாறியிருக்கிறது. இதேபோன்று இந்திய அணியில் பேட்டிங் கீழ் வரிசையில் வீரர்கள் சொதப்புகிறார்கள்.

முதலில் 430 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோரில் இருந்த இந்திய அணி 471 ரன்கள் இந்திய அணியில் பேட்டிங்கையும் மாற்ற வேண்டும் என கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசியவர் இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி சரியாக விளையாடவில்லை என்றால் சாய் சுதர்சனையும், கருண் நாயரும் நீக்குவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் முதல் டெஸ்ட் முடிவடைந்த உடன் இந்த இரண்டு வீரர்களையும் நான் நீக்க மாட்டேன் .அதுபோல் வாஷிங்டன் சுந்தரையும் அணிக்குள் கொண்டு வர நான் முயற்சி செய்வேன். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக மாறும். அது மட்டுமில்லாமல் பந்துவீச்சில் பல வகையான வீரர்கள் கேப்டன்களுக்கு கிடைப்பார்கள் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, June 25, 2025, 23:28 [IST]
Other articles published on Jun 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+