லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 123 ஆண்டுகள் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்து விட முடியும்.
அதுவே இங்கிலாந்து வென்றாலோ இல்லை சமன் செய்தாலோ தொடரை அந்த அணி வென்று விடும். இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தற்போது இந்திய அணி 263 ரன்கள் என்ற முன்னிலையை தாண்டி சென்று விட்டது. இதன் மூலம் இந்த இலக்கை இங்கிலாந்து அணி எட்டினால், 123 ஆண்டுகள் சாதனையை முறியடித்து விடும்.
இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் கடைசி இன்னிங்ஸில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இலக்கு என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்த ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக 263 ரன்கள் வெற்றிகளமாக இங்கிலாந்து அணியால் எட்டப்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1902 ஆம் ஆண்டு இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு 1963ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 253 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியது. 1972 ஆம் ஆண்டு 242 என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணியும், 1988 ஆம் ஆண்டு 225 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிகரமாக எட்டி இருக்கிறது.
219 ரன்கள் என்ற இலக்கை இலங்கை அணி 2024 ஆம் ஆண்டும் 204 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்த அணி 1994 ஆம் ஆண்டும் எட்டியது. 197 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணியும், 2008 ஆம் ஆண்டும் 173 ரன்கள் என்று வெற்றி இலக்கை இந்திய அணியும் 1971 ஆம் ஆண்டு எட்டிருக்கிறது. இதே போன்று 163 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 1951 ஆம் ஆண்டும் பாகிஸ்தான் அணி 148 ரன்கள் என்ற இலக்கை 2010 ஆம் ஆண்டு வெற்றிகரமாக கட்டியது.
இதனால் இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் 123 ஆண்டுகால சாதனையை முறியடிக்க வேண்டும். இதனால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் கடைசியாக இங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் என்ற இலக்கை எட்டி இருக்கிறது. இதனால் ஆடுகளம் சமீப காலத்தில் கடைசி இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு சாதகமாக தற்போது மாறி இருப்பதையே இது காட்டுகிறது. இதனால் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.