IND vs ENG: பேட்டிங் வரிசையில் ஒவ்வொரு இடத்திலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் யார்?
பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்திருக்கிறார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் இந்திய அணி 587 ரன்கள் குவித்து இருக்கின்றது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை கில் பெற்றிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முதலிடத்திலிருந்து 11-வது இடத்தில் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் தொடக்க வீரர் இரண்டு இடத்திலுமே சேவாக் தான் இருக்கின்றார்.

சேவாக் நம்பர் ஒன்றாவது வீரராக களமிறங்கி 254 ரன்கள் எடுத்திருக்கின்றார். இதே போன்று நம்பர் இரண்டாவது வீரராக களம் இறங்கி ஷேவாக் 319 ரன்களை விளாசி இருக்கின்றார். இதை போன்று நம்பர் மூன்றாவது வீரராக விவிஎஸ் லக்ஷ்மன் களமிறங்கி 281 ரன்கள் குவித்துள்ளார்.
நம்பர் நான்காவது வீரராக சுப்மன் கில் 269 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். நம்பர் ஐந்தாவது இடத்தில் கருண் நாயர் 303 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறார். இதேபோன்று இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் நம்பர் ஆறாவது வீரராக களமிறங்கிய தோனி 224 ரன்கள் குவித்து இருக்கின்றார். இதைப்போன்று ஏழாவது இடத்தில் களமிறங்கிய ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டின் 175 ரன்கள் அடித்திருக்கின்றார்.
இதே போன்ற நம்பர் எட்டாவது வீரராக மீண்டும் தோனி களமிறங்கி 144 ரன்கள் எடுத்திருக்கின்றார். இதுபோன்று நம்பர் ஒன்பதாவது வீரராக ஜெயந்த் யாதவ் 104 ரன்கள் எடுத்திருக்கின்றார். நம்பர் பத்தாவது வீரராக தேசாய் 85 ரன்களும், நம்பர் 11 ஆவது வீரராக ஜாகிர் கான் 75 ரன்கள் எடுத்திருக்கிறார். இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக 269 ரன்கள் குவித்திருப்பதன் மூலம் 46 ஆண்டுகால கவாஸ்கரின் சாதனையை கில் முறியடித்து இருக்கின்றார்.
இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் படைத்திருக்கின்றார். இதேபோன்று தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற அசாருதீனின் 35 ஆண்டு கால சாதனையை கில் முறியடித்து இருக்கின்றார்.
இதேபோன்று சேனா நாடுகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் சச்சினின் 21 ஆண்டு கால சாதனையையும் கில் முறியடித்துள்ளார். இதைப் போன்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற கோலியின் 6 ஆண்டு கால சாதனை முறியடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications