Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG 5வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் புதிய கேப்டன் ஒல்லி போப்.. செஞ்ச சாதனைய பாருங்க!

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக வழக்கமான கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளதால், ஒல்லி போப்பிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஒல்லி போப் கேப்டனாக எப்படி செயல்படப் போகிறார்? இதற்கு முந்தைய செயல்பாடுகள் எப்படி? என்று பார்க்கலாம்.

இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஒல்லி போப், 35.58 என்ற சராசரியில் 9 சதங்களுடன் 3,558 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இதுவரை இங்கிலாந்து அணியை நான்கு டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். அதில் மூன்று போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் பெற்றுத் தந்துள்ளார்.

IND vs ENG How England Captain ollie Pope spared in the past as captain

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் போப் கேப்டனாகச் செயல்பட்டார். மான்செஸ்டர் மற்றும் லார்ட்ஸ் மைதானங்களில் நடந்த முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து முறையே ஐந்து விக்கெட்டுகள் மற்றும் 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், ஓவல் மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது. அதே மைதானத்தில் இப்போது மீண்டும் இந்திய அணிக்கு எதிராக அவர் கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாததால், போப் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டனாக ஒல்லி போப்பின் சாதனைகள்:

  1. இலங்கை: மான்செஸ்டர் - 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
  2. இலங்கை: லார்ட்ஸ் - 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  3. இலங்கை: ஓவல் - 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
  4. பாகிஸ்தான்: முல்தான் - இன்னிங்ஸ் & 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பேட்டிங்கில் எப்படி?

கேப்டனாக ஒல்லி போப்பின் செயல்பாடு நன்றாக இருந்தாலும், பேட்டிங்கில் அவர் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக விளையாடிய நான்கு போட்டிகளில், அவர் 27.28 என்ற சராசரியில் வெறும் 191 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் (154 ரன்கள்) அடங்கும்.

டி.ஆர்.எஸ்-ல் (DRS) ஒரு மோசமான சாதனை

ஒல்லி போப்பின் கேப்டன்சி பற்றி பேசும்போது, ஒரு சுவாரஸ்யமான ஆனால் மோசமான புள்ளிவிவரத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் கேப்டனாக இருந்த நான்கு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 13 முறை டி.ஆர்.எஸ் (Decision Review System) முறையீட்டைப் பயன்படுத்தியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு முறைகூட அவர்களால் அம்பயரின் தீர்ப்பை மாற்ற முடியவில்லை. அந்த 13 டி.ஆர்.எஸ் முறையீடுகளும் தோல்வியிலேயே முடிந்தன.

கேப்டனாக அவரது வெற்றிப் பதிவு சிறப்பாக இருந்தாலும், டி.ஆர்.எஸ் விஷயத்தில் அவரது ராசி அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே, ஓவல் டெஸ்டில் ஒல்லி போப்பின் கேப்டன்சி மற்றும் அவரது டி.ஆர்.எஸ் தேர்வுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்க்கவும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Story first published: Thursday, July 31, 2025, 8:22 [IST]
Other articles published on Jul 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+