IND vs ENG: 5வது டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணி முதல் இன்னிங்சில் எவ்வளவு ரன் அடிக்கனும்
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியில் இருக்கின்றது. இந்த தருணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆடுகளத்தை பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கின்றது. களத்தில் புற்கள் அதிக அளவு இருப்பதால் பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் சமன் செய்தாலே தொடரை வென்று விடும்.

தற்போது முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் எவ்வளவு ரன்கள் அடித்தால் வெற்றி பெற முடியும் என்பதை தற்போது பார்க்கலாம். ஜெய்ஸ்வால் இரண்டு ரன்களிலும், ராகுல் 14 ரன்களிலும் ஆட்டம் இழக்க தற்போது 25 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருக்கின்றது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் குறைந்தபட்சம் 350 ரன்கள் ஆவது அடிக்க வேண்டும். ஏனென்றால் ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணியின் முதல் இலக்கு 350 ரன்கள் ஆக இருக்க வேண்டும். அந்த ஸ்கோரை தாண்டி விட்டால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 அல்லது 450 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும்.
முதல் இன்னிங்சில் இந்திய அணி எவ்வளவு முன்னிலை பெறுகிறதோ அந்த அளவுக்கு இந்திய அணிக்கு சாதகமாக முடிவு அமையும். சாய் சுதர்சன் தனது கவுண்டி கிரிக்கெட்டில் இதே மைதானத்தில் தான் விளையாடி அனுபவம் பெற்று இருக்கிறார். இதனால் அவர் இரண்டு இன்னிங்சிலும் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும்.
ஆனால் ஜெய்ஸ்வால் கடந்த சில இன்னிங்ஸ்களாக தடுமாறி வருகிறார். இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 220 ரன்கள் குவித்து இருந்த ஜெய்ஸ்வால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மொத்தமாகவே 73 ரன்கள் தான் எடுத்திருக்கின்றார். கடைசியாக 5 இன்னிங்சில் அவருடைய சராசரி 14 என்று அளவில் இருக்கின்றது. இதனால் ஜெய்ஸ்வால் தொடர்ந்து அபாரமாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications