IND vs ENG: வெற்றி பெற்றும் இங்கிலாந்துக்கு பயனில்லை.. ICC நடவடிக்கையால் WTC புள்ளி பட்டியலில் சரிவு
லண்டன்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ச் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.
ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் இருந்ததும் இந்த நிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு தற்போது அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை ஐசிசி கொடுத்திருக்கிறது. அதன்படி லண்டன் லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கூறி அவர்களுக்கு புள்ளிகளை குறைத்து இருக்கின்றது.

இதன் மூலம் 24 புள்ளிகளில் இருந்து 22 புள்ளிகளுக்கு இங்கிலாந்து குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுடைய வெற்றி சதவீதம் கடுமையாக சரிந்திருக்கிறது. இந்த அபராததிற்கு முன்பு 66.67% இருந்த இங்கிலாந்தின் வெற்றி சதவீதம் தற்போது 61.1 என சரிந்திருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இறங்கி இருக்கிறது.
இதனை அடுத்து இலங்கை அணி இரண்டாம் தடவை பிடித்து இருக்கின்றார்கள். இதேபோன்று ஐசிசி விதியின்படி எத்தனை ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருக்கிறதோ, அத்தனை புள்ளிகள் அபராதமாக விதிக்கப்படும். இதேபோன்று ஒரு ஓவர் குறைவாக வீசப்பட்டிருந்தால் அதற்கு 5% போட்டியின் ஊதியத்திலிருந்து அபராதமாக வீரர்கள் செலுத்த வேண்டும்.
அந்த வகையில் இங்கிலாந்து அணி வீரர்கள் இரண்டு ஓவர்கள் தாமதமாக வீசியிருந்ததால் தற்போது போட்டியின் ஊதியத்தில் இருந்து 10% அபாராதமும், 2 புள்ளிகளும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஓவர்கள் தாமதமாக வீசப்பட்ட புகாருக்கு ஸ்டோக்ஸ் ஒப்புக்கொண்டுதால் இந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை.
இதனிடையே, போட்டி 90 ஓவர்கள் முடிவதற்கு முன்பே முடிந்து விட்டது. ஆனால் அதன் பிறகும் அபராதமும் புள்ளிகளும் குறைக்கப்படுவது தேவைதானா என்ற கேள்வியும் இருந்துள்ளது. இங்கிலாந்து அமி ஸ்லோ ஓவர்ரேட்டால் பலமுறை புள்ளிகளை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பைனலுக்கு செல்லாமல் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications