கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்திய அணி 172 ரன்கள் தான் இலக்காக நிர்ணயித்த நிலையில் அதனை எட்ட முடியாமல் இங்கிலாந்து அணி படுதோல்வியை தழுவி இருக்கிறது.
இதன் மூலம் கடந்த டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த சூழலில் உலகக் கோப்பை தொடர் லீக் சுற்று அமெரிக்காவிலும், மற்ற முக்கிய போட்டிகள் மேற்கிந்திய தீர்வுகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஏற்றார் போல் இந்திய அணி மட்டும் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தது. இதே போல் அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியான போதே இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் எந்த இடத்தை பிரித்தாலும் கயானா ஆடுகளத்தில் தான் விளையாடுவார்கள் என்று ஐசிசி அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் மைக்கேல் தளத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
கயானா ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும் என்பது வரலாறு. இதனால்தான் இந்தியாவுக்கு ஏற்ற மைதானத்தில் போட்டி நடத்தப்படுவதாக பலரும் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த ஆடுகளம் போட்டி செல்ல செல்ல தோய்வாக மாறும். எனினும் இது பற்றி தெரியாமல் மழை பெய்வதை நம்பி ஜாஸ் பட்லர், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
ஆனால் இதனை நன்கு புரிந்து கொண்ட ரோகித் சர்மா, மழை பெய்தாலும், சரி பெய்யவில்லை என்றாலும் சரி தாங்கள் முதலில் பேட்டிங் தான் தேர்வு செய்ய இருந்தோம் என்று கூறி இருந்தார். ரோகித் சர்மா ஆடுகளம் குறித்து ஏற்கனவே நன்கு ஆய்வு செய்து தெரிந்து கொண்டதால் இந்த முடிவை அவர் தைரியமாக எடுத்தார். மழை பெய்தாலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவேன் என ரோகித் சர்மா எடுத்த முடிவு இன்று இந்தியா வெற்றி பெற காரணமாக அமைந்திருக்கிறது.
மேலும் மழை தொடர்ந்து செய்தாலும் அடிக்கடி வெயில் அடித்து ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருந்தது. இதன் மூலம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்பட்டது. இந்த இடத்தில் தான் இங்கிலாந்து அணி மிகப்பெரிய தவறு செய்தது. இங்கிலாந்து அணி டாசை வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து அணியில் மோயின் அலி இருந்தும் அவரை பந்து வீச ஜாஸ் பட்லர் பயன்படுத்தாததும் பெரிய காரணமாக தோல்விக்கு அமைந்து விட்டது.