Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: போராடிய பண்ட்.. இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.. ஸ்டோக்ஸ் 8 ஆண்டுக்கு பிறகு சாதனை

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற கேப்டன் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர். ராகுல் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் வெளியேறினார்.

Ind vs Eng

இதேபோன்று ஜெய்ஸ்வால் 58 ரன்களில் எடுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 12 ரன்கள் வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 142 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது சாய் சுதர்சன், ரிஷப் பண்டும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 151 பந்துகளை எதிர் கொண்டு 61ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். பண்ட் 37 ரன்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து ஜடேஜாவும், சர்துல் தாக்கூரும் அணியை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜடேஜா 20 ரன்களில் ஆட்டம் இழக்க சர்துல் தாக்கூர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் சேர்த்தார். இந்த கட்டத்தில் காலில் எலும்பு முறிவுடன் மீண்டும் களத்திற்கு வந்து அரை சதம் அடித்து ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் இந்திய அணி 114 புள்ளி ஒரு ஓவர் எதிர்கொண்டு 358 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 24 ஓவர்கள் வீசி அவர் 72 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கின்றார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று ஜோப்ரா ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார். தற்போது இங்கிலாந்து அணியை 250 ரன்கள் சுருட்டி முன்னிலை பெற்றால் இந்திய அணி இந்த போட்டியில் வெல்ல வாய்ப்பு இருக்கின்றது.

Story first published: Thursday, July 24, 2025, 19:10 [IST]
Other articles published on Jul 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+