Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 39 ஆண்டுக்கு பின் முதல் முறை.. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்த இந்தியா

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடும் விறுவிறுப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கின்றது. டெஸ்ட் போட்டி என்றால் ஒரு அணி நன்றாக விளையாடும், இன்னொரு அணி கொஞ்சம் தடுமாறும். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் ஒரே மாதிரி விளையாடி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்திருக்கின்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சூழலில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவது என்பது மிகவும் முக்கியம்.

Ind vs Eng

அந்த வகையில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி இந்த ஸ்கோரை கடந்து முன்னிலை பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த வகையில் ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், கருண் நாயர் 40 ரன்களிலும், கேப்டன் கில் 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 145 ரன்கள் மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் அபாரமாக விளையாடி தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாவது சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துள்ளார். மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடி காட்டி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்களில் அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் ஏழாவது விக்கெட்டுக்கு நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. நிதீஷ்குமார் ரெட்டி 30 ரன்களில் ஆட்டம் இழக்க, சிறப்பாக விளையாடிய ஜடேஜா 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஜடேஜா நடப்பு டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் அரை சதம் அடித்துள்ளார். இந்த சூழலில் ஜடேஜா ஆட்டம் இழந்தவுடன் ஆகாஷ் தீப் 7 ரன்கள் எடுக்க, பும்ரா அவுட் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 119 புள்ளி இரண்டு ஓவர் முடிவில் 387 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை இந்திய அணி சமன் செய்து இருக்கிறது.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா இதுவரை முதல் இன்னிங்சிக் மூன்றாவது முறையாக எதிர் அணியின் ஸ்கோரை சமன் செய்திருக்கிறது. இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக பிர்மிங்காம் மைதானத்தில் 1986 ஆம் ஆண்டு இதே போல் இங்கிலாந்து அடித்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை இந்திய அணி சமன் செய்து இருக்கிறது.

Story first published: Saturday, July 12, 2025, 23:22 [IST]
Other articles published on Jul 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+