For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: கருண் நாயரை நீக்கியதாக யார் சொன்னாங்க? பேட்டிங் பயிற்சியாளர் கருத்து

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. அதில் முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் எடுத்தது. இதன் காரணமாக 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 174 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் கேப்டன் கில் 78 ரன்களும், கேஎல் ராகுல் 88 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் கோடக், ஆடுகளம் சிறிதளவு சிதலம் அடைந்திருக்கின்றது. மற்றபடி அபாயகரமாக ஒன்றுமில்லை.

Sitanshu Kotak

எனினும் ஐந்தாவது நாளில் நாங்கள் ஒவ்வொரு மணி நேரமாக பிரித்து விளையாட வேண்டும் என நினைக்கின்றோம்.ராகுல், கில்லும் நம்பிக்கையுடனும் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற உத்வேகத்துடனும் விளையாடினார்கள். அவர்கள் களத்தில் ஆடிய விதம் நிச்சயம் பாராட்ட வேண்டியது.

இந்த தொடர் முழுவதுமே ராகுல் அபாரமாக செயல்பட்டு வருகின்றார். நாங்கள் நேரத்தை கடக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
வீரர்கள் காயம் அடையும்போது அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். ராகுல் காயம் அடைந்தவுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என யாரும் தடுக்கவில்லை .

ஒரு வீரருக்கு காயம் அடைந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது யாரும் சொல்ல முடியாது என்று கோடாக் கூறினார். இந்த சூழலில் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் நீக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் கோட்டாக் அளித்தார்.

இது குறித்து தலைமைப் பயிற்சியாளர் கம்பீரும்,கில்லும் தான் பேச வேண்டும். ஆனால் இதில் நாங்கள் கருண் நாயரை தொடர்ந்து ஆதரிப்போம் என்று கூறி இருக்கின்றார். அது மட்டுமில்லாமல் இந்த தொடரில் நாயர் நல்ல தொடக்கத்தை பெற்று இருக்கிறார். எனவே அவரை குறை சொல்ல முடியாது என்று கோட்டாக் கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 27, 2025, 8:00 [IST]
Other articles published on Jul 27, 2025
English summary
Ind vs Eng- India batting coach Sitanshu Kotak Gives Update about Karun Nair
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+