For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: 3வது நாள் முடிவில் 244 ரன்கள் இந்திய அணி முன்னிலை.. இங்கிலாந்தை வீழ்த்த என்ன செய்யனும்?

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் 244 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. பிர்மிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கில் 269 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஆறு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.எனினும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெமி ஸ்மீத் ஆட்டம் இழக்காமல் கடைசிவரை 184 ரன்கள் எடுத்தார்.

Ind vs Eng

ஹாரி புரூக் 158 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணி 407 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.

இதை அடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி 13 ஓவர்கள் மட்டுமே மூன்றாவது நாளில் எஞ்சி இருந்தது. இதில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 6 பவுண்டர்களை அடித்து 22 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி 13 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருக்கின்றது. கே எல் ராகுல் 28 ரன்களிலும், கருண் நாயர் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 244 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்போது இன்னும் ரெண்டு நாள் ஆட்டம் எஞ்சி இருக்கிறது.

இதில் இந்திய அணி எவ்வளவு இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் இலக்கை இந்தியா நிர்ணயித்தும், அதனை இங்கிலாந்து அணி வெற்றிகரமாக எட்டியது. இதனால் அதைவிட 100 ரன்கள் கூடுதலாக இந்திய அணி இலக்கை நிர்ணயிக்க வேண்டும். நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கிட்டத்தட்ட ஒரு நாள் கிரிக்கெட் போல் விளையாடி 300 ரன்களுக்கு மேல் இரண்டாவது இன்னிங்ஸில் குவிக்க வேண்டும். அதன் பின் 450 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்து வந்து வீசி 10 விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் வீழ்த்த வேண்டும்.

Story first published: Friday, July 4, 2025, 23:29 [IST]
Other articles published on Jul 4, 2025
English summary
Ind vs Eng- India lead by 244 runs at the End of Day 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+