Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ராகுல், ரிஷப் பண்ட் விக்கெட்டுகள் காலி.. தோல்வியின் விளிம்பில் இந்திய அணி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இறுதியில் விளிம்பில் தவித்து வருகின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரமாக போராடி வருகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுக்க இந்திய அணி 387 ரன்களும் எடுத்து இந்த ஸ்கோரை சமன் செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்கள் எடுத்தது.

Ind vs Eng

இதனை அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. குறைந்த இலக்கு என்பதால் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜெய்ஸ்வால் டக்அவுட் ஆகியும் கருண் நாயர் 14 ரன்களிலும் வெளியேறியும் கில் 6 ரன்களில் ஆட்டம் இழந்தது. ஆகாஷ் தீப் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பியும் தடுமாறினர்.

இதனால் இந்திய அணி 58 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து ஐந்தாவது நாள் ஆட்டத்தில் மேலும் 135 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கைவசம் 6 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களத்தில் பெரிய ஸ்கோர் அடித்து இந்திய அணியை காப்பாற்றுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ராகுல் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில் வெளியேறினார். இந்த தருணத்தில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அவரும் டக்அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 82 ரன்கள் 7 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இன்னும் 111 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் கைவசம் வெறும் மூன்று விக்கெட்டுகள் தான் இருப்பதால் இங்கிலாந்து அணியின் கை ஓங்கி இருக்கின்றது

Story first published: Monday, July 14, 2025, 16:39 [IST]
Other articles published on Jul 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+