Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : 2வது டி20 போட்டி இந்திய அணியில் 2 மாற்றம்.. ஷமிக்கு ஏமாற்றம்.. அதிரடி பேட்ஸ்மேன் தேர்வு

சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச டி20 போட்டி நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது t20 போட்டியில் இங்கிலாந்து அணி பதில் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இந்த சூழலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் பந்து வீசுவதாக அறிவித்தார்.

ind vs eng india cricket team suryakumar

இது குறித்து பேசிய அவர், "நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது ரன் குவிக்க சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன். நாங்கள் எங்களுடைய அடிப்படையை தொடர்ந்து பாலோ செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம். இந்த போட்டியை நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்".

எங்களது அணியில் பீல்டிங்கில் அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடரில் இருந்து நிதிஷ்குமார் ரெட்டி காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதேபோன்று ரிங்கு சிங்கிற்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் அடுத்த இரண்டு போட்டியில் பங்கேற்க மாட்டார்.

இவர்கள் இருவருக்கும் பதிலாக சென்னையை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார். இதைப் போன்று துருவ் ஜூரல் இன்றைய ஆட்டத்தில் இடம் பிடித்திருக்கிறார் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய ஜாஸ் பட்லர், நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங் செய்து இருப்போம்.

எங்களுடைய திட்டம் ஒரே மாதிரி தான் இருக்கின்றது. இன்றைய ஆட்டத்தில் கொஞ்சம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. பெத்தேலுக்கு உடல்நலம் சரியில்லை. அவருக்கு பதிலாக ஜிம்மி ஸ்மித் அணிக்கு திரும்பிருக்கிறார். இதேபோன்று ஆட்கின்சனுக்கு பதிலாக பிரைட்டன் கர்ஸ் அணிக்கு வந்திருக்கிறார் என ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 25, 2025, 18:53 [IST]
Other articles published on Jan 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+