Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்திய அணியில் 3 மாற்றம்! அறிமுகமாகும் CSK வீரர்..தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய பிளேயிங் லெவனில் மூன்று மாற்றம் செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதால், நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த சூழலில் மான்செஸ்டர் நகரில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Ind vs Eng

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், நாங்கள் முதலில் பந்துவீச்சில் ஈடுபட போகிறோம். வானம் மேக மூட்டமாக இருக்கின்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கும் இடையே நிறைய ஓய்வு இருந்தது. இதனால் பலரும் தங்களது வீட்டுக்கு சென்று எங்களை சார்ஜ் செய்து கொண்டு வந்து இருக்கின்றோம்.

மூன்று போட்டிகளும் கடைசி நாள் கடைசி நேரம் வரை நடந்தது. இதனால் இந்த போட்டியை நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் அணியில் நல்ல தகுதியுடைய திறன் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். எங்கள் அணியில் டாசன் திரும்பி இருக்கின்றார். அவர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டிக்கு திரும்பிருக்கின்றார் என கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் கில், டாஸ் வென்றால் நான் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தேன். இதனால் டாசை இழந்தது எனக்கு சந்தோஷம்தான். மூன்று டெஸ்ட் போட்டிகளும் மிக சிறந்த முறையில் இருந்தது. சில முக்கிய தருணங்களில் நாங்கள் கோட்டை விட்டோம். பல செஷன்களில் இங்கிலாந்தை விட நாங்கள் நன்றாக செயல்பட்டோம்.

இந்த ஓய்வு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மூன்று டெஸ்ட் போட்டியில் கடும் நெருக்கடி ஏற்படுத்தியதால், இந்த ஓய்வு எங்களுக்கு தேவைப்பட்டது. இந்த ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. நாங்கள் எங்கள் அணியில் மூன்று மாற்றம் செய்திருக்கின்றோம். கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன், நிதீஷ் குமார் இணைந்து இருக்கிறார்கள் என்று கில் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, July 23, 2025, 15:16 [IST]
Other articles published on Jul 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+