Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்திய அணி இந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால், தொடரை வென்றிருக்கலாம்.. கிளார்க் கருத்து

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது. இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க், குல்தீப் யாதவை சேர்க்காமல் இந்திய அணி தவறு செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்த 8 ஆண்டுகளில் குல்தீப் வெறும் 13 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். அதில் 56 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார். நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

Ind vs Eng

இதேபோன்று இங்கிலாந்து மண்ணில் கடைசியாக அவர் 2018 ஆம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதில் அவர் எந்த ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. எனினும் இங்கிலாந்துக்கு எதிராக குல்தீப், ஆறு போட்டியில் விளையாடி மொத்தமாக 21 விக்கெட்டுகளை இதுவரை தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் கைப்பற்றி இருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க், குல்தீப் யாதவ் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஒருவேளை அவர் இந்த தொடரில் விளையாடி இருந்தால் இந்திய அணி நிச்சயமாக இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற உதவியாக இருந்திருப்பார். இதன் மூலம் இந்திய அணி தொடரையும் வென்றிருக்கலாம்.

அதற்காக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜாவை நான் எந்த குறையும் சொல்லவில்லை. ஏனென்றால் இந்த இருவரும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றி இருக்கிறார்கள். இதற்காக இந்த இரண்டு வீரர்களின் யாரும் விமர்சிக்க கூடாது. பேட்டிங் வரிசையில் இந்த இரண்டு வீரர்களும் தங்களால் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமோ, அதை செய்து விட்டார்கள்.

தங்கள் கிடைத்த வாய்ப்பை இருவரும் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவின் எக்ஸ் பேக்ட்ராக குல்தீப் நிச்சயமாக இருந்திருப்பார். இந்த தொடரில் பந்துவீச்சில் இந்திய அணிக்கு பெரும் உதவியாக அவர் இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன் என்று கிளாக் கூறியுள்ளார்.

அண்டர்சன் டெண்டுல்கர் கோப்பையில் ஜடேஜா ஐந்து டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 516 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் ஐந்து அரை சதம், ஒரு சதம் அடங்கும். இதில் அவருடைய பேட்டிங் சராசரி 86 ஆகும். பந்துவீச்சில் சடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வாஷிங்டன் சுந்தரும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் 284 ரன்களும், 7 விக்கெட்டும் வீழ்த்தினார். பேட்டிங்கில் ஒரு அரை சதம், ஒரு சதமும் அடங்கும்.

Story first published: Friday, August 8, 2025, 23:06 [IST]
Other articles published on Aug 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+