Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: சிராஜ் விரித்த வலையில் சிக்கிய சாக் கிராலி.. இந்தியாவுக்கு 9 விக்கெட், இங்கி. 324 ரன்கள் தேவை

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மேலும் 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணத்தில் பின்தங்கி இருப்பதால், கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

ஆனால் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இந்த போட்டியை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். இங்கிலாந்து அணியில் வெற்றிக்கு மேலும் 324 ரன்கள் தேவைப்படும் நிலையில் கடைசி இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியிருப்பதால் போட்டியில் ரிசல்ட் இருக்கும்.

Ind vs Eng

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுக்க, 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடுகிறது. ஜெய்ஸ்வால் சதம் அடிக்க, ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

இதன் மூலம் இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஜாக் கிராலி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து, வெற்றிக்கு தேவையான இலக்கை குறைக்க முயற்சி செய்வார்கள் என்பதை கணித்த இந்திய அணி ஆரம்பம் முதலில் தற்காப்பு பில்டிங்கை நிறுத்தியது.

இதனால் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் கொஞ்சம் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். அவர்கள் ரன்கள் எடுக்க கொஞ்சம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் முகமது சிராஜ் ஒரு வலையை விரித்தார். ஜாக் கிராலி ஷார்ட் பால் வீசுவதற்காக பில்டிங் செட்டப்பை நிறுத்தினார். இதனால் ஷார்ட் பால் வரும் என சாக் கிராலி எதிர்பார்த்த நிலையில் ஃபுல் லெங்தில் ஒரு பந்தை வீச அது ஸ்டெம்பை பதம் பார்த்தது.

இதனால் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு மேலும் ஒன்பது விக்கெட்டுகளும், இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 324 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் நான்காவது நாள் ஆட்டத்திலே போட்டி முடிவடைய வாய்ப்பு இருக்கின்றது. இதன் காரணமாக நான்காவது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, August 2, 2025, 23:56 [IST]
Other articles published on Aug 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+