For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: மான்செஸ்டரில் இதுவரை ஒரு டெஸ்ட்டில் கூட வெற்றி இல்லை.. இந்திய அணியின் ரெக்கார்ட் என்ன?

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மான்செஸ்டர் நகரில் புதன்கிழமை பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், மான்செஸ்டர் நகரில் எத்தனை போட்டிகள் விளையாடி இருக்கிறது. இதில் எத்தனை வெற்றி, தோல்வி தழுவி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணி மான்செஸ்டர் மைதானத்தில் 1936 ஆம் ஆண்டு முதல் விளையாடி இருக்கிறது. இந்த 89 ஆண்டுகளில் இந்திய அணி மான்செஸ்டர் மைதானத்தில் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது.

India Record at Manchester Test

இதில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் ஐந்து போட்டிகளில் இந்தியா சமன் செய்திருக்கிறது. நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கின்றது. மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய அணி அடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்றால் 432 ரன்கள் ஆகும்.இது 1990 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. மான்செஸ்டர் மைதானத்தில் இந்தியா அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் என்றால் 58 ரன்கள் ஆகும்.
இது 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது ஆகும்.

மான்செஸ்டர் மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் கவாஸ்கர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 242 ரன்கள் அடித்திருக்கின்றார். இதேபோன்று மான்செஸ்டர் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். சச்சின், அசாருதீனுக்கு பிறகு இந்த மைதானத்தில் எந்த ஒரு இந்திய வீரர்களும் 36 ஆண்டுகளாக சதம் அடிக்கவில்லை.

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக சந்தீப் பாட்டில் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு சிக்ஸர்களை அடித்து இருக்கின்றார்கள். இந்த மைதானத்தில் இந்திய வீரர் வினோ மான்கட் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார். இந்த மைதானத்தில் 1936 ஆம் ஆண்டு முதல் விக்கெட்டுக்கு சையது முஸ்தாக் அலியையும் விஜய் மெர்ச்ண்டும் இணைந்து 203 ரன்கள் சேர்த்தது இந்தியா சார்பாக அதிக பார்ட்னர்ஷிப் ஆகும்.

இந்திய அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் விளையாடி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதேபோன்றுதான் பிர்மிங்காம் மைதானத்தில் இந்தியா ஒரு வெற்றியை கூட பெறாமல் இருந்த நிலையில் நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. அதேபோல் மான்செஸ்டர் மைதானத்திலும் முதல் வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Tuesday, July 22, 2025, 10:28 [IST]
Other articles published on Jul 22, 2025
English summary
Ind vs Eng- India Record at Manchester Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+