IND vs ENG: இந்திய அணி இமாலய ரன் குவிப்பு.. 269 ரன்கள் குவித்த சுப்மன் கில்.. இங்கிலாந்துக்கு சவால்
பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு முதல் இன்னிங்ஸில் இமாலய ஸ்கோரை எட்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 600 ரன்கள் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கீழ் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதனால் 500 ரன்களை கூட தொட முடியாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில் முதல் டெஸ்டில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட இந்திய அணி வீரர்கள் இரண்டாவது டெஸ்டில் அபாரமாக விளையாடினர்.

இங்கிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இந்த சூழலில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. கருண் நாயர் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 87 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதேபோன்று பந்த் 25 ரன்களிலும் நிதிஷ்குமார் ரெட்டி ஒரு ரன்னிலும் ஆட்டம் இழக்க இந்திய அணி 210 ரன்களில் 5 விக்கெட் என்ற ஸ்கோர் எடுத்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த சுப்மன் கில், ஜடஜா ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். ஆறாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 203 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஜடேஜா 89 ரன்கள் ஆட்டம் இழக்க, மறுமுனையில் கில் தன்னுடைய முதல் சதத்தை 199 பந்துகளிலும் இரண்டாவது சதத்தை 311 பந்துகளில் பூர்த்தி செய்தார். இந்த தருணத்தில் தொடர்ந்து அதிரடி காட்டிய இங்கிலாந்து வீரர்கள் அவருடைய விக்கெட்டை எடுக்க முடியாமல் தடுமாறினர்.
348 பந்துகளில் 250 ரன்கள் கில் எடுத்தார். இதனால் முச்சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும் 269 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார். 30 பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடித்திருந்தார். இதனால் இந்திய அணி 587 ரன்களில் சுருண்டு 600 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 13 ரன்களில் அந்த இலக்கை 600 ரன்கள் என்ற ஸ்கோரை இந்திய அணி தவறவிட்டது.
இங்கிலாந்து பந்துவீச்சில் சோயிப் பஷீர் 167 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் ஜோஸ் டாங், வொக்ஸ் 2 விக்கெட் வீழ்த்திருக்கின்றனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் சுருட்ட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றார். அப்போதுதான் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications