ஆஸி.வுக்கு விரித்த அதே வலை.. இங்கிலாந்துக்கும் செம பிளான் இருக்கு.. இந்திய அணியின் திட்டம் இதுதான்!
சென்னை : இந்திய டெஸ்ட் அணி வலுவான ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி உள்ள நிலையில் அடுத்ததாக இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
ஆஸ்திரேலிய அணியை எப்படி திட்டமிட்டு வீழ்த்தியதோ, அதே போல இங்கிலாந்து அணிக்கும் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது இந்திய அணி.
அந்த திட்டம் குறித்த ஒரு முக்கிய தகவலை பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியாவில் உலகின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன ஸ்டீவ் ஸ்மித்துக்கு தனியாக குறி வைத்தது இந்திய அணி. அவர் அதிகம் ஆஃப் சைடு தான் ரன் குவித்து இருக்கிறார் என்பதால் அவருக்கு ஆஃப் சைடு பந்து வீசக் கூடாது என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்தனர்.

வெற்றிக்கு காரணம்
மற்ற ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் அதே போல பந்து வீசிய இந்திய அணி, ஸ்டீவ் ஸ்மித் மட்டுமின்றி ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய அணியையும் முதல் மூன்று இன்னிங்க்ஸ்களில் 2௦௦ ரன்களை தாண்ட விடவில்லை. அதுவே வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

இங்கிலாந்து அணியில் யார்?
ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் என்றால், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட். ஆம், இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய துணைக்கண்ட சூழ்நிலையில் ஜோ ரூட் இரட்டை சதம், சதம் என அடித்து இங்கிலாந்து அணியை தனி ஆளாக சுமந்து வருகிறார். அவருக்கு தான் இந்திய அணி குறி வைத்துள்ளது.

இந்திய அணி
இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஆன அவரை வீழ்த்தினால் அது மொத்த இங்கிலாந்து அணியின் பேட்டிங்கையும் பாதிக்கும். பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைய இருப்பதால் அவருக்கும் தனியாக திட்டம் வகுக்க இந்திய அணி முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications