Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : தப்பிச்சுட்டான்.. மரண மாஸ் கம்பேக் கொடுத்த சுப்மன் கில்.. சாதனை சதம் விளாசல்!

விசாகப்பட்டினம் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 இன்னிங்ஸ்களுக்கு பின் இந்திய அணியின் சுப்மன் கில் அரைசதம் விளாசி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷொப் இறுதிப்போட்டிக்கு பின் புஜாராவை கழற்றிவிட்ட இந்திய அணி நிர்வாகம், அவரது இடமான நம்பர் 3 பேட்டிங் வரிசைக்கு சுப்மன் கில்லை கொண்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில், தானாகவே நம்பர் 3 பேட்டிங் வரிசையை கேட்டு பெற்றதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தார்.

IND vs ENG: Indian Cricketer Shubman Gill Scored a fifty against England after a 12 innings in Test Cricket

ஆனால் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கிய இளம் வீரர் சுப்மன் கில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகி வெளியேறி, இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். குறிப்பாக இடதுகை ஸ்பின்னர்களுக்கு எதிராக சுப்மன் கில் திணறியது அப்பட்டமாக தெரிந்தது.

இந்திய மண்ணில் நம்பர் 3ல் களமிறங்கி வரும் வீரர் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறியது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது. இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் 34 ரன்களில் ஆட்டமிழக்க, முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கொந்தளித்தார்.

இந்த நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் புகுந்த சுப்மன் கில் இங்கிலாந்து ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறினார். அதிலும் டாம் ஹார்ட்லி வீசிய ஒரு பந்தில் நடுவர் அவுட் கொடுத்தும், டிஆர்எஸ் முறையீட்டால் தப்பினார். ஆனால் அதிர்ஷ்டத்தால் கிடைத்த வாய்ப்பை சுப்மன் கில் சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.

அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய அணியின் மீதான அழுத்தத்தை இங்கிலாந்து அணி பக்கம் திருப்பிய சுப்மன் கில், 60 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் நம்பர் 3 வரிசையில் களமிறங்கி சுப்மன் கில் அரைசதம் அடிப்பது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் சுப்மன் கில் மீண்டும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களிலும், ரஜத் பட்டிதர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினாலும், சுப்மன் கில் ஒருபுறமும் நங்கூரமிட்டு நின்றார். அக்சர் படேலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில், 132 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் அடிக்கும் 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 4, 2024, 11:38 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+